கரூர் மாணவி தற்கொலை: இனியும் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் தடுக்க உறுதி ஏற்க வேண்டும் - கனிமொழி

பாலியல் தொல்லை காரணமாக கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தி, மிகுந்த சோகத்தை ஏற்படுத்துவதாக கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தைகள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையை எதிர்க்கவும் எந்த ஒரு அச்ச உணர்வுமின்றி அதுகுறித்த புகாரை வெளியே சொல்வதற்குமான பாதுகாப்பான சூழலை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பள்ளி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி சில நாட்களுக்கு முன் கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தனக்கு யார் யாரெல்லாம் பாலியல் தொல்லை கொடுத்தார்கள் என்பதைக் கடிதம் மூலம் தெரிவித்துவிட்டு, அவர்களை சும்மா விட கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை உருவாக்கியது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த பாதிப்பு மறையும் முன்பே கரூரில் அடுத்த சோகம் அரங்கேறியுள்ளது.

கரூர் மாணவி தற்கொலை

கரூர் மாணவி தற்கொலை

கரூரில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தில், தன்னை யார் பாலியல் தொந்தரவு செய்தார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை. பயம் காரணமாகவே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயரை தெரிவிக்கவில்லை.

பாதியில் போகிறேன்

பாதியில் போகிறேன்

மாணவி எழுதிய அந்தக் கடிதத்தில், "sexual harassment ஆல் சாகுற கடைசி பொண்ணு நானாக தான் இருக்கணும். என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு, இந்த பூமியில் வாழரதுக்கு ஆசைப்பட்டேன், ஆனா, இப்போ பாதியிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும் என்று எழுதியுள்ளார்.

மன்னிப்பு கேட்ட மாணவி

மன்னிப்பு கேட்ட மாணவி

பெரிதாகி நிறைய பேருக்கு உதவி செய்ய ஆசை ஆனா முடியல. ஐ லவ் அம்மா, சித்தப்பா, மணி மாமா, அம்மு உங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும், ஆனா நான் உங்கிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன்... மன்னிச்சுருங்க என்றும், இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக் கூடாது என்றும், சாரி மச்சான் சாரி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சோகம்

சோகம்

இந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாலியல் தொல்லை காரணமாக கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தி, மிகுந்த சோகத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    அந்த Police-ஐ உடனடியாக அரசு Dismiss பண்ணணும் - MP Jothimani | Oneindia Tamil
    உறுதி ஏற்க வேண்டும்

    உறுதி ஏற்க வேண்டும்

    எந்த ஒரு அச்ச உணர்வுமின்றி அதுகுறித்த புகாரை வெளியே சொல்வதற்குமான பாதுகாப்பான சூழலை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த அவல நிலையை மாற்ற, இனியும் இம்மாதிரியான கொடும் சம்பவம் நிகழாமல் தடுக்க நாம் அனைவரும் உறுதி ஏற்கவேண்டும் எனவும் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+