’காளிமுத்து பேரன்..செந்தமிழனின் மாவீரன்’..! சீமான் மகனை நெகிழ்ந்து பாராட்டிய வைரமுத்து! என்ன காரணம்?
சென்னை : தான் கடந்த 2019ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட 'தமிழாற்றுப் படை' நூலை படிக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகன் மாவீரனை பாராட்டி கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றினை எழுதியுள்ளார்.

தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களில் வைரமுத்து மிகவும் முக்கியமானவர். இதுவரை 7500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள அவர், சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7 முறை பெற்றுள்ளார்.
திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது நாவல்கள் கவிதைத் தொகுப்புகள் மூலம் மிகவும் பிரபலமானவர் கவிஞர் வைரமுத்து.

இந்நிலையில் 2019 ஜூலையில் வைரமுத்து 'தமிழாற்றுப் படை' என்ற நூலை வெளியிட்டார். மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழின் பெருமையை விளக்கும் வகையில் வைரமுத்து அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட இந்நூல் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. புத்தகத்தைப் படித்த ரஜினிகாந்த், வைரமுத்துவின் மதிப்பு 100 மடங்கு உயர்ந்துவிட்டதாகப் பாராட்டினார்.
இந்நிலையில் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை புத்தகத்தை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகன் மாவீரன் இந்த புத்தகத்தை படிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதன் பின்னணியில் பேசியிருந்த சீமான், ஐயா என் மகன் தமிழாற்றுப் படை நூலை புரட்டிப் புரட்டிப் படிப்பதை பாருங்கள் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தனது நூலை படிக்கும் சீமானின் மகனுக்காக வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றினை சீமான் வெளியிட்டுள்ள வீடியோவை இணைத்து பகிந்துள்ளார். அதில்,
"காளிமுத்து பேரன்
செந்தமிழன் சீமானின்
திருச்செல்வன் மாவீரன்
தமிழாற்றுப்படையோடு
உறவாடி விளையாடும்
ஒளிப்படங்கள் கண்டேன்
நாளையொரு பூமலர
நல்லதமிழ்த் தேன்சிதற
வாழையடி வாழையென
வளருமடா தமிழ்க்கூட்டம்
என்று வாய்விட்டுச்
சொல்லிக்கொண்டேன்
தமிழாற்றுப்படையோடும்
தமிழர் படையோடும்
வா மகனே!"
என பதிவிட்டுள்ளார். இதனை பலரும் பாராட்டி லைக் செய்து வருகின்றனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications