கேபி பார்க் கட்டிடம்.. பிஎஸ்டி நிறுவனம் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யாதது ஏன்? அறப்போர் இயக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று வரை கே.பி.பார்க் கட்டுமானத்தில் ஊழல் செய்தவர்கள் மீது அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பி.எஸ்.டி. நிறுவனம் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது.

மக்களுக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு கே.பி.பார்க் கட்டடம் முழுவதுமாக சரிசெய்யப்பட வேண்டும் என்று அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமானத்தின் போது நடந்துள்ள ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆதாரங்களுடன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தரம் குறித்து ஐஐடியின் CUBE நிறுவனம் அளித்த முழு ஆய்வு அறிக்கையையும் அறப்போர் இயக்கம் வெளியிட்டது.

பி எஸ் டி நிறுவனம்

பி எஸ் டி நிறுவனம்

அது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறப்போர் இயக்க அலுவலகத்தில் ஜெயராம் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. அப்போது பேசிய ஜெயராம் வெங்கடேசன் கூறுகையில், "இன்று வரை கே.பி.பார்க் கட்டுமானத்தில் ஊழல் செய்தவர்கள் மீது எந்த அரசு விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பி எஸ் டி நிறுவனம் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறையிடம் CUBE நிறுவனத்தின் முழு ஆய்வு அறிக்கையுடன் புகார் அளித்துள்ளோம்.

சிங்கிள் டெண்டர்

சிங்கிள் டெண்டர்

2007-ல் கே பி பார்க் கட்டுமானத்திற்கான டெண்டர் விடப்படுகிறது. பி எஸ் டி நிறுவனம் மட்டுமே தகுதி பெற்றவராக அறிவிக்கப்பட்டு ஒருவர் மட்டுமே விலை பட்டியலில் பங்கெடுக்கும் Single Bid Tender ஆக வழங்கப்பட்டுள்ளது. 32,000 சதுர மீட்டருக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 89 கோடி 92 லட்சம் ரூபாய் A,B,C,D ஆகிய 4 ப்ளாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அடிக்கு 800 ரூபாய் சந்தை மதிப்பை விட அதிகமாக பி எஸ் டி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் 27 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மணல் விகிதம்

மணல் விகிதம்

CUBE ஆய்வறிக்கையை பார்க்கும்போது 1:3 என்கிற அளவில் சிமெண்ட் மணல் விகிதம் இருக்க வேண்டிய 95% மாதிரிகளில் மணலின் அளவு மிக அதிகமாக உள்ளது. அதேபோல 1:5 விகிதத்தில் சிமெண்ட் மணல் விகிதம் இருக்க வேண்டிய இடங்களில் 89% மணலின் அளவு மிக அதிகமாக உள்ளது. மொத்தத்தில் 70% மாதிரிகள் பூச்சு வேலைகளை பொறுத்தவரை தரமில்லாமல் உள்ளது. முக்கியமாக ப்ளாக் பி இன் திரத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.

நாமக்கல் நிறுவனம்

நாமக்கல் நிறுவனம்

இரண்டாவது கட்டத்தில் கட்டப்பட்ட 1056 வீடுகள் தருண் கட்டுமான நிறுவனம் என்ற நிறுவனம் கட்டப்பட்டதாக சொல்கிறார்கள். அந்த டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது. தருண் கட்டுமான நிறுவனமும் நாமக்கலை சேர்ந்த நிறுவனம் தான். அந்த நிறுவனத்துக்கும் பி எஸ் டி க்கும் தொடர்பு உள்ளது. அது பற்றியும் லஞ்சஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்.

என்ன சம்பந்தம்

என்ன சம்பந்தம்

ஐஐடி ஆய்வறிக்கை வந்த பிறகும் ஏன் இன்னும் FIR பதியப்படவில்லை என்பதற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். கீழ்மட்ட அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது, அப்போது துணை முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வம் தொடங்கி அனைவர் மீதும் விசாரணை பாய வேண்டும். பி எஸ் டி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யாமல் இந்த விவகாரம் ஏன் மூடி மறைக்கப்படுகிறது. அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கும் பி எஸ் டி நிறுவனத்துக்கும் என்ன தொடர்பு என்பதை வெளிப்படையாக கேட்கிறோம். ஏன் வழக்கு பதியப்படாமல் உள்ளது? திமுக அரசு பி எஸ் டி நிறுவனத்தை காப்பாற்ற முயற்சிக்கிறது.

எப்படி சாத்தியம்

எப்படி சாத்தியம்

45 நாட்களுக்குள் கட்டிடத்தை சரி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு பி எஸ் டி நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அது எப்படி முடியும்? முழு பூச்சு வேலையையும் அகற்றிவிட்டு தானே சரி செய்ய முடியும். தமிழக அரசின் இந்த உத்தரவு வெறும் கண்துடைப்பு வேலைதான். மக்களுக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு அந்த கட்டடம் முழுவதுமாக சரிசெய்யப்பட வேண்டும்" இவ்வாறு ஜெயராமன் வெங்கடேசன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+