“ஸ்ட்ரேஞ்சர்” அனுப்பிய ஆடை.. நெகிழ்ந்து நன்றி சொன்ன பிக்பாஸ் விக்ரமன்! நான்தான் அது..யார் அந்த பெண்?
சென்னை: பிக்பாஸ் போட்டியாளர் விக்ரமன் தனக்கு ஆடைகளை அனுப்பி வரும் முகம் தெரியாத நபருக்கு கேமரா முன்பாக வந்து நன்றி தெரிவித்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. யார் அந்த முகம் தெரியாத நபர் என்று தெரிய விருப்பமா? முழுமையாக படிங்க
விஜய் டிவியில் நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
வாரந்தோறும் ஒரு போட்டியாளர் இதில் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இதில் நடிகர்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், பாடகர்கள், நடன கலைஞர்கள், நகைச்சுவை கலைஞர்கள் என பலரும் பங்கேற்று இருக்கிறார்கள்.
எவிக்ட்டானார் பிக்பாஸ் சீசன் 6ன் ஸ்லீப்பிங் பியூட்டி? நடிகை குயின்ஸி வாங்கிய சம்பளம் எவ்வளவு ?

விக்ரமன்
அந்த வகையில் பத்திரிகையாளரும் அரசியல்வாதியுமான விக்ரமனும் இதில் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். இதில் விக்ரமனை அரசியல் பிரமுகர் என்றே கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அங்கம் வகித்து தமிழ் மற்றும் ஆங்கில தொலைக்காட்சி விவாதங்களில் பேசி வந்த விக்ரமன் பல்வேறு போராட்டக் களங்களிலும் பங்கெடுத்து வந்துள்ளார்.

முற்போக்கு கருத்துக்கள்
ஒடுக்கப்பட்ட, பட்டியலின, சிறுபான்மை சமூகத்தினர், பெண்கள், திருநங்கைகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்துள்ளார். அதேபோல், மதவாத, சாதி வெறிக்கு எதிராகவும் விக்ரமன் அழுத்தமான கருத்துக்களை தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் ட்விட்டரில் தெரிவித்து வந்தவர் விக்ரமன். அதையே பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளேயும் அவர் செய்து வருகிறார்.

பெரும் ஆதரவு
சக போட்டியாளர்கள் பிற்போக்குத் தனமான, பெண்கள் அல்லது குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான கருத்துக்களை யாராவது பேசினால் அதை வெளிப்படையாகவே கண்டித்து வந்தார். இதன் காரணமாக, விக்ரமனை சக போட்டியாளர்களில் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து ஒதுக்கி வந்தனர். இதனை வெளிப்படையாகவே அவர் கண்டித்தார். ஆனால், கமல்ஹாசன் விக்ரமனின் கருத்துக்களை பாராட்டினார். மக்களும் விக்ரமனுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

விக்ரமனின் ஆடை
இந்த நிலையில் நேற்று விக்ரமன், தனக்கு இந்த வாரம் ஆடை அனுப்பி வரும் முகம் தெரியாத நபர்களுக்கு நன்றி என்று கேமராவை நோக்கி பேசியது அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த முகம் தெரியாத நபர் நான் தான் என முகநூலில் பதிவிட்டு இருக்கிறார் பிரபல ஆடை வடிவமைப்பாளரான சிந்து.

ஆடை வடிவமைப்பாளர்
அவர் தனது பதிவில், "இத விட என்ன வேணும்..(நான் தான் காஸ்டியூம் டிசைனர்னு அவருக்கு இந்த நிமிஷம் வரை தெரியாது). ஒவ்வொரு வாரமும் நிச்சயமா அவருக்கு இந்த காஸ்டியூம் புடிக்கும்னு தான் டிசைன் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் மக்கள் இந்த வாரம் சிம்பிளா இருக்கு. இந்த காஸ்டியூம் குடுங்க.

மக்கள் பரிந்துரை
நீங்க விக்ரம சிம்பிளா காட்றீங்க.. மத்த பிக்பாஸ் போட்டியாளர்களை விட அவர் ரொம்ப சிம்பிளா தெரியுறாருன்னு. அதுனால வித்தியாசமா கிராண்டா காஸ்டியூம் குடுங்கன்னு நிறைய பரிந்துரைகள் வரும்.. ஆனாலும் அப்போதைக்கு என் மனசுல என்ன தோணுதோ அத மட்டும் தான் செய்வேன்.
அப்ப ஒரு டவுட் இருக்கும். இந்த ட்ரெஸ் புடிக்குமா என்னவோன்னு. இன்னைக்கு அதுக்கு பதில் கிடைச்ச மாதிரி இந்த கருத்து.

நான் யார் என்று தெரியாது
காஸ்டியூம் அவருக்கு நல்லாருக்கோ இல்லயோ. ஆனா அவருக்கு புடிச்சிருக்கு. அந்த சந்தோஷத்தோட வெளிபாடு தான் இந்த காம்ப்ளிமெண்ட். காஸ்டியூம்னால ஒரு முகத்துல இவ்வளோ சந்தோஷத்த குடுக்க முடியும்ங்குறதே என் வேலைக்கான வெற்றியா நினைக்குறேன்.. அதுவும் நான் யார்னே தெரியாது. நான்தான் காஸ்டியூம் டிசைனர்னு தெரியாத பட்சத்துல.

மனசுதான் சார் கடவுள்
விக்ரமன சிம்பிளா காட்றீங்க அப்டின்னு சொன்னவங்களுக்கான பதில் தான் அவர் முகத்துல உள்ள சந்தோஷம். இந்த காம்ப்ளிமென்ட். இந்த தேங்க்ஸ்ஸ அதுவும் கேமரா முன்னாடி நின்னு அவர் சொல்லனும் அவசியம் இல்லை. ஆனா சொல்லனும்னு தோணுச்சு பாருங்க! அந்த மனசு தான் சார் கடவுள். சிம்பிளிசிட்டிதான் விக்ரமன். அந்த எளிமைதான் அவருக்கான அடையாளம்." என்று பதிவிட்டு உள்ளார்.