பெண்ணை அப்படி டார்கெட் பண்ணாதீங்க.. சித்தார்த் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி.. சாய்னா பரபர பதில்
சென்னை: சித்தார்த் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி, ஒரு பெண்ணை யாரும் டார்கெட் செய்து தாக்கி பேச கூடாது என்று பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு குறைக்கப்பாடுகளால் பஞ்சாபில் பிரதமர் மோடியின் கான்வாய் முடக்கப்பட்டது குறித்து சாய்னா நேவால் சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்து இருந்தார். சாய்னா தெரிவித்த கருத்தில், ஒரு நாட்டில் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் அந்த நாட்டை எப்படி பாதுகாப்பான நாடு என்று சொல்ல முடியும். பிரதமர் மீது தாக்குதல் நடத்தியவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
சாய்னாவின் இந்த ட்விட் வைரல் ஆன நிலையில் அதை ஷேர் செய்து நடிகர் சித்தார்த் இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்து இருந்தார்

பாலியல்
பாலியல் ரீதியாக மோசமான கருத்து வரும்படி இரட்டை அர்த்தத்துடன் சாய்னாவை சித்தார்த் கிண்டல் செய்து இருந்தார். இவரின் கருத்துக்கு இந்திய மகளிர் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தேசிய அளவில் பெரிய சர்ச்சையானது. பல தரப்பில் இருந்தும் சித்தார்த்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இவருக்கு எதிராக இந்திய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபியிடம் புகாரும் அளித்தது.

சாய்னா எதிர்ப்பு
சித்தார்த்தின் இந்த கருத்துக்கு சாய்னாவும் கண்டனம் தெரிவித்து இருந்தார். சித்தார்த் இப்படி பேசி இருக்க கூடாது. அவர் இன்னும் சிறப்பான வார்த்தைகளை பயன்படுத்தி முறையாக தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கலாம். நம்முடைய நாட்டில் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் யாருக்கு பாதுகாப்பு இருக்கும். சித்தார்த்தை ஒரு நடிகராக எனக்கு பிடிக்கும் . ஆனால் அவர் அப்படி பேசி இருக்க கூடாது.

சாய்னா சித்தார்த்
அவர் பேசியது தவறு. அவர் ஏன் அப்படி பேசினார் என்று தெரியவில்லை என்று சாய்னா குறிப்பிட்டார். இதையடுத்து இந்த விவகாரம் பெரிதானதால் சித்தார்த் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். சித்தார்த் வெளியிட்ட மன்னிப்பு கடிதத்தில், நான் தவறாக பகிர்ந்த ஜோக்கிற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். அதற்காக நான் கூறிய வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது.

சித்தார்த் மன்னிப்பு
சரியான கருத்தை பேசாத அந்த நகைச்சுவைக்காக வருந்துகிறேன். எனது வார்த்தைகளை நான் சரியாக எடுத்துரைக்கவில்லை. எந்த தரக்குறைவான எண்ணத்தோடும் நான் பேசவில்லை. நாம் இந்த பிரச்னையை முடித்து கடந்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் எப்போதுமே என்னுடைய சாம்பியன் தான் என்று சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டு சித்தார்த் போஸ்ட் செய்து இருந்தார்.

சாய்னா விளக்கம்
இந்த நிலையில் சித்தார்த் மன்னிப்பு கேட்டதற்கு தற்போது சாய்னா நேவால் பதில் அளித்துள்ளார். அதில், சித்தார்த் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி. அவர் முதலில் என்னை பற்றி எதோ சொன்னார். இப்போது மன்னிப்பு கேட்டு இருக்கிறார். அவர் பேசியது ஏன் வைரல் ஆனது என்று கூட தெரியவில்லை. என்னுடைய பெயர் இணையத்தில் ஏன் டிரெண்ட் ஆனது என்றும் கூட தெரியவில்லை. எனக்கு அதை பார்க்கவே ஆச்சர்யமாக இருந்தது.
Recommended Video

சித்தார்த் கருத்து சாய்னா
ஒரு பெண்ணை நீங்கள் அப்படி டார்கெட் செய்ய கூடாது. இப்போது ஓகே.. நான் அதை பற்றி கவலைப்படவில்லை. நான் என்னுடைய இடத்தில் சந்தோசமாக இருக்கிறேன். கடவுள் சித்தார்த்தை ஆசிர்வதிக்க வேண்டும். நான் இதை பற்றி எதுவும் நினைக்கவில்லை, என்று சாய்னா நேவால் விளக்கம் அளித்துள்ளார். சித்தார்த் முன்வந்து மன்னிப்பு கேட்ட நிலையில்.. அவர் மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.. கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும் என்று சாய்னா பெருந்தன்மையோடு கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications