எல்லா ஜாதியினருக்கும் சான்ஸ்! நகராட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி -முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை தனித்து போட்டியிட பாமக முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் சேலத்தில் போட்டியிட உள்ள பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் 148 வார்டுகளுக்கு வேட்பாளர் பட்டியலை பாமக முதல் கட்டமாக வெளியிட்டு உள்ளது. கடந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 9 மாவட்டங்களில் பாமக தனித்து போட்டியிட்டது. சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்றது.
அதிமுக தலைமை தொண்டர்களை சரியாக கட்டுப்படுத்தவில்லை. அதிமுக தலைமை வலுவாக இல்லை என்று அதன் நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் வைத்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது.

கூட்டணி இல்லை
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா என்ற கேள்வி நிலவி வந்தது. ஆனால் பாமக தொடக்கத்தில் இருந்தே இந்த கூட்டணியை விரும்பவில்லை. திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று பாமக ராமதாஸ், எம்பி அன்புமணி ஆகியோர் கட்சி கூட்டங்களில் பேசி வந்தனர். அதன்படியே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை தனித்து போட்டியிட பாமக முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் சேலத்தில் போட்டியிட உள்ள பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சி தலைமை வெளியிட்டது.

பாமக பேட்டி
இந்த நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாமகவிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பாமகவிற்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பாமகவிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இந்த தேர்தல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.கே.மணி பேட்டி
அதேபோல் சேலம் மாவட்டத்தில் 60 வார்டுகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளோம். பிற மாவட்டங்களில் விரைவில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். தனி தொகுதிகளில் எஸ்சி பிரிவினருக்கு வாய்ப்பு அளித்துள்ளோம். அதேபோல் பொது பிரிவிலும் எஸ்டி பிரிவினருக்கு வாய்ப்பு அளித்தோம். பிராமணர் தொடங்கி எல்லா சமூகத்தினருக்கும் வாய்ப்பு வழங்கி இருக்கிறோம்.

தலித் வேட்பாளர்களுக்கு
பாமக வேட்பாளர்களில் புது முகம், இளைஞர்கள், வழக்கறிஞர்கள், படித்தவர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாமகவில் எப்போதும் மருத்துவர் ராமதாஸ் சொல்வதே வேத வாக்கு. அவர் தேர்வு செய்த வேட்பாளர் பட்டியலை நிர்வாகிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறோம். பாமகவின் வளர்ச்சிக்கு உதவ கூடிய தேர்தலாக இந்த தேர்தல் அமையும் என்று நம்புகிறோம்.
-
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications