சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாட்டரி மார்ட்டின், சரவணா கோல்ட் பேலஸ் சொத்துக்கள் முடக்கம்..அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

லாட்டரி அதிபர் மார்ட்டின், சரவணா கோல்ட் பேலஸ் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.173 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை மூடக்கியது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கடன் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சரவணா கோல்டு பேலசின் 235 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

லாட்டரி அதிபா் மாா்ட்டின், சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்றதாக புகாா் கூறப்பட்டது.இது தொடா்பாக சிபிஐயின் கொச்சிப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனா். சிபிஐ விசாரணையில், மாா்ட்டினும், அவரது கூட்டாளிகளும் சிக்கிம் மாநில அரசுக்கு சொந்தமான லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து, கேரளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

Lottery scam: ED attaches assets worth Rs 173 cr of Santiago Martin

இதில் கடந்த 1 ஏப்ரல் 2009 தேதியிலிருந்து 31 ஆகஸ்ட் 2010 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் லாட்டரி வியாபாரத்தில் முறைகேடாக ரூ.910.3 கோடி மாா்ட்டினுக்கு கிடைத்திருப்பதையும், அந்தப் பணத்தை மாா்ட்டின் 40 நிறுவனங்களின் அசையா சொத்துகளில் முதலீடு செய்திருப்பதையும் சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால், அவர் மீது அமலாக்கத்துறையும் தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தது. இதன் ஒரு பகுதியாக சட்டவிரோதமாகக் கிடைத்த பணத்தின் மூலம் மாா்ட்டின் வாங்கியதாகக் கருதப்படும் ரூ.119.6 கோடி மதிப்புள்ள 61 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், 82 காலிமனைகள், 6 கட்டடங்கள் ஆகியவற்றை அமலாக்கத்துறையினர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி முடக்கினர்.

இதுதவிர ஏற்கெனவே சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.138.5 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மார்ட்டின் பெயரிலும், அவரது குடும்பத்தினா் பெயரிலும் இருந்த ரூ.19.59 கோடி மதிப்புள்ள அசையும்,அசையா சொத்துகளை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையின் கொச்சி பிரிவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடக்கியது. இந்த நிலையில் இன்றைய தினம் 173 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ரூ.480.69 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.173 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை மூடக்கியது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

வங்கிக் கடன் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சரவணா கோல்டு பேலசின் 235 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சென்னை தியாகராய நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் மற்றும் அதன் பங்குதாரர்களான சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவன் உள்ளிட்டோர் மீது இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாகி கே.எல்.குப்தா சிபிஐயிடம் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2017ஆம் ஆண்டு கமர்ஷியல் ஷோரூம் வாங்குவதற்காக 150கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும், மேலும் 90கோடி ரூபாய் கடனையும் அதே ஆண்டு வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடன் தொடர்பான சொத்துக்களை வங்கிக்கு தெரியாமல் மாற்றியதும், இரண்டாவதாக பெறப்பட்ட 90கோடி ரூபாய் கடன் மூலம் ஷோரும் வாங்கப் பெற்ற கடனை அடைக்க முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதன் மூலம் இந்தியன் வங்கிக்கு 312 கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்படுத்தும் வகையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கே.எல்.குப்தா குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிலையில், வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் மற்றும் பங்குதாரர்கள் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் சரவணா கோல்டு பேலசின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

English summary
Indian Bank had declared Saravana Stores Gold Place a fraud Assets and Enforcement of Security Interest (SARFAESI) Act. The Enforcement Directorate (ED) attached assets worth Rs 173 crore of lottery king Santiago Martin and his associates in connection with a lottery scam case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X