கரூர் கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்கள் ஓத ஐகோர்ட் கிளை உத்தரவு!
மதுரை: கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்கள் ஓதவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்துக்குள் உட்கார வைக்க வேண்டும், யாக குண்டத்துக்கு வெளியே உட்கார வைக்க கூடாது என்று கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜந்திரன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு அளித்துள்ளது.

கரூர் தான்தோன்றி மலையில் அமைந்துள்ள கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நாளை (ஜனவரி 28) நடைபெறுவதை முன்னிட்டு கரூர் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடைபெற்று வருகின்றன.
சமீபகாலமாக தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற பழனி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான கோரிக்கை மிக வலுவாக எழுப்பப்பட்டது. கரூர் மாவட்டத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமுக்கூடலூர் ஸ்ரீ அகத்திஸ்வரர் கோயிலில் மணிமுக்தீஸ்வரர் சுவாமிக்கு குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என தமிழ் அறிஞர்கள், சிவனடியார்கள் கூட்டமைப்பினர் திரண்டு போராடி முதல்முறையாக தமிழில் குடமுழுக்கு விழாவை நடத்தினர்.
இந்நிலையில், கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில், தமிழில் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும், குறைந்தபட்ச தமிழ் மந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜந்திரன் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று ஐகோர்ட் மதுரை கிளை அமர்வில் விசாரணைக்கு வந்தது.
கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்கள் ஓதவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்துக்குள் உட்கார வைக்க வேண்டும், யாக குண்டத்துக்கு வெளியே உட்கார வைக்க கூடாது என்று கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜந்திரன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு அளித்துள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications