மநீம பரிதாபங்கள்.. ஒரு ஓட்டு கூட கிடைக்காத சிவகங்கை வேட்பாளர்.. தனது வாக்கை கூட தனக்கு போடவில்லையா?
சென்னை: சிவகங்கை நகராட்சி 1ஆவது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளருக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்ரில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு
தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் திமுக, அதிமுகவை தாண்டி மக்கள் அதிகம் எதிர்பார்த்தது மக்கள் நீதி மய்யம், தேமுதிக, நாம் தமிழர், விஜய் மக்கள் இயக்கம் ஆகியவற்றைத்தான்!

மக்கள் நீதி மய்யம்
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டசபை தேர்தல்களில் கணிசமான வாக்கு சதவீதத்தை பெற்றது மக்கள் நீதி மய்யம். பின்னர் கடந்த ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கமல் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெறவில்லை.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசன் வியூகத்தை மாற்றி நோட்டீஸ் பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். பின்னர் சில இடங்களுக்கு நடந்தே சென்று வாக்குகளை சேகரித்தார். இந்த நிலையில் சிவகங்கை நகராட்சியில் 1வது வார்டு ம.நீ.ம வேட்பாளருக்கு 1 ஓட்டுகூட கிடைக்கவில்லை. இந்த வேட்பாளரின் குடும்பத்தினர் கூட ஒரு வாக்கு கூட அளிக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. அதற்கு மேல் அந்த வார்டில் வேட்பாளருக்கு வாக்கு இருக்குமே அவரும் அவருக்கே போட்டுக் கொள்ளவில்லையா என நெட்டிசன்கள கேலி செய்து வருகிறார்கள்.

விஜய் மக்கள் இயக்கம்
விஜய் மக்கள் இயக்கம், நாம் தமிழர், இத்தனை ஏன் பாஜக கூட சில இடங்களில் வென்றுவிட்டது. ஆனால் மக்கள் நீதி மய்யம் தேமுதிகவை போல் தேய்ந்து வருவதாக கட்சியினர் வேதனையில் உள்ளார்கள். கடந்த முறையே கமல்ஹாசன் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தவில்லை என கட்சியிலிருந்து விலகியவர்கள குற்றம்சாட்டினர்.

விக்ரம் 2 படம்
தற்போது விக்ரம் 2 படத்தில் அவர் நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார். அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர்தான் விலகினார். அதுவும் விக்ரம் 2 படத்தை முடித்துக் கொடுப்பதற்காக என காரணத்தையும் விளக்கியுள்ளார். சினிமாவில் நடிக்க பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகிய நிலையில் தேர்தல் பிரச்சாரங்களில் கமல்ஹாசன் கவனம் செலுத்தவில்லையோ என தோன்றுகிறது.

சினிமாவில் நடித்தால் அரசியலுக்கு எப்படி?
ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பவர்கள் எப்படி அரசியலில் மக்கள் பணிகளை செய்ய முடியும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போது, ஏன் அரசியல்வாதிகள் அவரவர் தங்களுக்கான தொழிலை செய்யும் போது சினிமா நடிகர்களால் ஏன் அரசியலையும் கவனிக்க முடியாது என்ற கேள்வி எல்லாம் எழுந்தது. இதே கேள்வி ரஜினிகாந்துக்கும் எழுந்தது. அவர் தன் கைவசம் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு! எம்ஜிஆர் கூட நடித்துக் கொண்டேதான் அரசியலில் சாதித்தார் என்றெல்லாம் விவாதங்களும் முன்னுதாரணங்களும் முன் வைக்கப்பட்டன. ஆனால் மகள் நீதி மய்யம் ஏன் சோபிக்கவில்லை என்பதை கமல்ஹாசன் சுயபரிசோதனை செய்து பார்த்தால் மட்டுமே உண்மை விளங்கும்.
-
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி












Click it and Unblock the Notifications