மாண்டஸ் புயல் புரட்டி போட்ட மெரினா மரப்பாலம்.. உடைந்த மரக்கட்டைகள்.. இப்போ எப்படி இருக்கு தெரியுமா?
சென்னை: மாண்டஸ் புயலால் சேதமடைந்த மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலம் சேதமடைந்த நிலையில் தற்போது அந்த பாலம் எப்படி எந்த நிலையில் இருக்கிறது என தெரியுமா?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு புயலும் வந்து சென்றுவிட்டது. கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இது அடுத்த நாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது.
பின்னர் கடந்த 7ஆம் தேதி புயலாக உருமாறியது. பின்னர் சூறாவளி புயலாகவும் மாறியது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. இந்த பெயரை ஐக்கிய அரபு நாடுகள் பரிந்துரை செய்தது. இந்த புயல் ஸ்ரீஹரிகோட்டா- புதுவை இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது.

மாண்டஸ் புயல்
கடந்த 9-ஆம் தேதி மாண்டஸ் புயல் சூறாவளி புயலிலிருந்து புயலாக வலுவிழந்தது. இந்த புயல் சென்னை கடற்கரையை நெருங்க நெருங்க அதிக காற்று வீசியது. மெரினா, பெசன்ட் நகர், பட்டினம்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. இந்த கடற்கரைக்குள் கடந்த 8ஆம் தேதி மாலை முதல் 9 ஆம் தேதி வரை செல்வதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்தது. அப்படியும் சிலர் கடற்கரைக்கு சென்று செல்பி எடுக்கச் சென்றனர்.

14 அடி உயரம்
அவர்களை போலீஸார் எச்சரிக்கை செய்து விரட்டி விட்டனர். மெரினாவில் தரைக்காற்று அதிகமாக வீசியது. கடல் அலைகள் 14 அடி உயரத்திற்கு எழும்பியது. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளையும் வலைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். இந்த கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் மோதியதால் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டப்பட்ட மரப்பாலம் கடும் சேதம் அடைந்தது.

மரப்பாலம் முழுவதும் மணல்
மரப்பாலம் முழுவதும் மணல் காணப்பட்டது. ஆங்காங்கே கட்டைகள் உடைந்து சேதமடைந்தன. மாற்றுத்திறனாளிகளும் கடல் அன்னையின் அன்பில் நனைய வேண்டும் என்பதற்காக தமிழக அரசு அவர்களுக்கென பிரத்யேகமாக மரப்பாலத்தை அமைத்தது. சுமார் ரூ 1 கோடியில் 263 மீட்டர் நீளத்தில் அமைத்த இந்த மரப்பாலம் குறிப்பிட்ட இடத்தில் கடற்கரை தார் சாலையிலிருந்து கடல் அலைகள் இருக்கும் இடம் வரை நீண்டு காணப்படும்.

தற்காலிக பாலம்
கடந்த பொங்கலையொட்டி தற்காலிகமாக இது போன்ற பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தில் மாற்றுத்திறனாளிகள் பயணித்து கடல் நீரில் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தனர். இந்த திட்டத்திற்கு பலரிடம் இருந்து வரவேற்பு கிடைத்ததால் இந்த பாலத்தை நிரந்தரமாக அமைக்கும் முயற்சிகளை சென்னை மாநகராட்சி செய்தது. அதன்படி கடந்த நவம்பர் 27 ஆம் தேதி இந்த நிரந்தர மரப்பாலம் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களின் பயன்பாட்டுக்காக விடப்பட்டது. ஆனால் தொடங்கப்பட்டு ஒரு வாரத்தில் இந்த பாலம் சேதமடைந்தது.

பாலம் சீரமைப்பு பணிகள்
இந்த பாலம் விரைவில் சரி செய்யப்படும் என சென்னை மேயர் ஆர் பிரியா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புயல் கடந்த 10-ஆம் தேதி அதிகாலை கரையை கடந்து அது அரபிக் கடலை அடைந்துவிட்டது. தற்போது வெயில் காய்ந்து வருவதால் அந்த மரப்பாலத்தை சீரமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக அந்த மரப்பாலத்தில் உள்ள மணல் அகற்றப்பட்டு வருகிறது. பின்னர் உடைந்த மரக்கட்டைகள் சரி செய்யப்படும். விரைவில் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்கு விடப்படும் என தெரிகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications