கட்சியை கலைத்து காங்கிரஸ் கட்சியில் இணைய மன்சூர் அலிகான் முடிவு.. செல்வப்பெருந்தகை வைத்த ‘ட்விஸ்ட்’!
சென்னை: இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையிடம் இதற்காக கடிதம் அளித்துள்ளார் மன்சூர் அலிகான்.
லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடந்து முடிந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

மன்சூர் அலிகான்: இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான், வேலூர் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் கட்சியை நடத்தி வந்தாலும், அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பலாப்பழம் சின்னத்தில் வாக்கு கேட்டு வேலூர் தொகுதி முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார் மன்சூர் அலிகான். தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரத்தின் கடைசி நாள் அன்று, மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சென்னையில் மேல் சிகிச்சை பெற்று அவர் குணமடைந்து திரும்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இணைய மன்சூர் திட்டம்: இந்நிலையில், தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மன்சூர் அலிகான், "பிரதமரை கைது செய்து திகார் சிறையில் அடைத்த பிறகு தான் தேர்தல் நடத்த வேண்டும். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பிரதமர் ஒரு வெங்காயத்தையும் உரிக்கவில்லை. நாட்டு மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கிவிட்டார்கள். வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரணக் குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போட வேண்டும்" என்றார்.
தாய் கட்சி: மேலும் பேசிய மன்சூர் அலிகான், "முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விலகிவிட்டேன். காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைவதற்காக கடிதம் கொடுத்திருந்தேன். ஆனால் போய்ச் சேரவில்லை போல. அதனால் தான் தனியாக கட்சி தொடங்கினேன்.
மீண்டும் தாய் கட்சியில் இணைய உள்ளேன். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி என்ற மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். எனது 'இந்திய ஜனநாயக புலிகள்' கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர்" என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை சொன்ன விஷயம்: ஆனால், தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் கட்சியில் இணைய முடியாது எனவும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மன்சூர் அலிகான் கொடுத்த கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
-
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!











Click it and Unblock the Notifications