நானும் லியாகத் அலிகானும் விஜயகாந்துடன் இருந்திருந்தால் இப்போ கேப்டன்தான் முதல்வர்.. மன்சூர் அலிகான்
சென்னை: நானும் லியாகத் அலிகானும் விஜயகாந்துடன் இருந்திருந்தால் இந்த நேரம் கேப்டன் விஜயகாந்த்தான் முதல்வர் ஆகியிருந்திருப்பார் என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காலை முதலே அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் மன்சூர் அலிகான், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

விஜயகாந்துக்கு வாழ்த்து
விஜயகாந்தை பார்த்துவிட்டு வெளியே வந்த மன்சூர் அலிகான் கூறுகையில் "நானும், லியாகத் அலி கானும் விஜயகாந்துடன் இருந்திருந்தால் இந்நேரம் அவர் முதல்வராக இருந்திருப்பார். கொரோனா என்று ஒன்றும் இல்லை. அதை வைத்து ஏமாற்றுகின்றனர்" என்றார். இதன் மூலம் அவர் கொரோனா குறித்து பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மக்கள் விரோத திட்டங்கள்
ஆரம்பத்திலிருந்தே மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து வருபவர் மன்சூர் அலிகான். இவர் முன்னதாக நடிகர் விவேக் உடல்நலக் குறைவால் இறந்தபோது அதை கொரோனா தடுப்பூசியுடன் சம்பந்தபடுத்தி பேசியதற்காக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதிகளின் அறிவுரை
இந்த வழக்கில் நீதிபதிகளின் அறிவுரையை ஏற்று இனி கொரோனா தொற்று குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேச மாட்டேன் என மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் கொரோனா குறித்து பேசியுள்ளார். கொரோனாவின் இரு அலைகளிலும் லட்சக்கணக்கானோர் இந்தியாவில் இறந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா என்பது ஏமாற்று வேலை என மன்சூர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்பி தேர்தல்
நாம் தமிழர் கட்சியில் இணைந்து கடந்த எம்பி தேர்தலில் போட்டியிட்ட மன்சூர் அலிகான் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து சட்டசபை தேர்தலில் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மன்சூர் அக்கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்து தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு 41 வாக்குகளை பெற்றது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications