சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரட்டை இலை, உதய சூரியன் சின்னம் வேறு கட்சிகளுக்கும் கொடுத்திருக்காங்களா.. என்னப்பா இது!

Google Oneindia Tamil News

சென்னை: சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்படும் சின்னங்கள் ஒரே மாதிரி இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் தமிழகத்தில் இரு பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுக்கமான சின்னங்கள் வேறு கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது உங்களுக்கு தெரியுமா?

லோக்சபா தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் தங்கள் சின்னத்தை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என ஒவ்வொரு கட்சிகளுக்கும் பிரத்யேகமாக ஒரு சின்னம் உண்டு என்பதுதான் நம்மில் பலரது கருத்தாக இருக்கும்.

ஆனால், உண்மை அதுவல்ல. பெரிய கட்சிகளின் சின்னங்கள் கூட ரிப்பீட் ஆகியுள்ளது.

சரத்குமார் எடுத்த முடிவால் அதிர்ச்சி.. ஒரு மாவட்டமே கூண்டோடு காலி.. அமமுகவுக்கு தாவினர்!சரத்குமார் எடுத்த முடிவால் அதிர்ச்சி.. ஒரு மாவட்டமே கூண்டோடு காலி.. அமமுகவுக்கு தாவினர்!

யானை

யானை

உதாரணத்திற்கு, உத்தரபிரதேசத்தில், பகுஜன் சமாஜ் பெரிய கட்சி. தேசிய கட்சியும் கூட. ஆனால் இந்த கட்சிக்கான யானை சின்னம், அசாமிலுள்ள, அசாம் கன பரிஷத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மாயாவதியை போலவே, அசாம் கனபரிஷத் தலைவர்களும், போடுங்கம்மா ஓட்டு யானை சின்னத்தை பார்த்து என்று ஓட்டு கேட்டு வருகிறார்கள். இந்த கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ஒரு வகையில் பார்த்தால், பரம எதிரியான மாயாவதியின் கட்சி சின்னத்திற்கு, அசாமில் பாஜக வாக்கு கேட்கும் நிலை அசாமில் உள்ளது நகை முரண்.

சிங்கம் கூட்டமாவும் வரும்

சிங்கம் கூட்டமாவும் வரும்

மேற்கு வங்கத்திலுள்ள அனைத்திந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சி, மேகாலயாவிலுள்ள ஹில் ஸ்டேட் பீப்பிள் டெமாக்ரடிக் கட்சி, கோவாவின் மஹாராஷ்ட்ரவாதி கோமண்டக் கட்சி ஆகிய கட்சிகளுக்கும் ஒரே சின்னம்தான். அங்கே யானை என்றால், இந்த கட்சிகளுக்கு பொதுவாக, சிங்கம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இனிமே சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்று யாரும் சொல்லிவிட முடியாது.

யாருக்கு அரியணை?முடிவு செய்யுமா தமிழ்நாடு.. பரபர கருத்து கணிப்பு

சைக்கிள் சின்னம்

சைக்கிள் சின்னம்

ஜம்மு காஷ்மீரிலுள்ள ஜம்முகாஷ்மீர் நேஷனல் பேந்தர்ஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, தெலுங்கு தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆனால், 2 தொகுதிகளுக்கும் மேல் தமாகா போட்டியிட்டால் அவர்களுக்கு சைக்கிள் கேரண்டியாகியிருக்கும்.

வில் அம்பு

வில் அம்பு

இதேபோல, ஜார்கண்ட் முக்தி மோச்சா மற்றும் மஹாராஷ்டிராவிலுள்ள சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு வில், அம்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பீஹாரிலுள்ள ஜனதா தளம் கட்சிக்கு அம்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பீஹாரிலுள்ள ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சிக்கும், ஆந்திராவிலுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் சீலிங் மின் விசிறி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை, உதய சூரியன்

இரட்டை இலை, உதய சூரியன்

இனிதான் சுவாரசிய கட்டம். அதிமுகவின் சின்னமான இரட்டை இலை, கேரளாவைச் சேர்ந்த, கேரள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவிற்கு உதய சூரியன் சின்னம் எல்லோருக்கும் தெரியும். அதே மாதிரி, மிசோரத்தை சேர்ந்த ஜோரம் நேஷனல் சூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது கதிர்களில்லாத சூரியன் சின்னமாகும். இப்படியாக கட்சிகளின் பெருக்கத்தால் சின்னத்திற்கான டிமாண்ட்டும் அதிகம்னா பார்த்துக்கொள்ளுங்கள்.

English summary
Many parties having similar symbol all over India, including that of DMK and AIADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X