சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாதியிலேயே அறுந்து போன ’ரீல்ஸ்’! சட்டென முடங்கிப் போன இன்ஸ்டாகிராம்! மெட்டாவுக்கு நேரம் சரியில்லையோ?

Google Oneindia Tamil News

சென்னை : உலகளவில் இளைஞர்களிடையே மிகப் பிரபலமான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கியதால் அதனை பயன்படுத்த முடியவில்லை என பயனாளர்கள் பலர் புகார் அளித்துள்ளனர்.

தற்போதைய நவீன செல்போன் விபத்தில் உணவில்லாமல் கூட இருந்து விடுவார்களோ என்னவோ சமூக வலைதளங்களில் உலாவாமல் பலரால் இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு வாழ்வில் அங்கமாகவே மாறிப் போய் உள்ளன சமூக வலைதளங்கள்.

ஆரம்பத்தில் பேஸ்புக் மட்டுமே பிரபல வலைதளமாக இருந்த நிலையில் அதன் பிறகு ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என பல தளங்கள் பல்கி பெருகின.

 இன்ஸ்டாகிராம் பயங்கரம்.. 2 இளைஞர்கள் கொடூரக் கொலை.. அதிக 'லைக்ஸ்' பெற்றதால் பெண் ஆத்திரம் இன்ஸ்டாகிராம் பயங்கரம்.. 2 இளைஞர்கள் கொடூரக் கொலை.. அதிக 'லைக்ஸ்' பெற்றதால் பெண் ஆத்திரம்

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டரில் தங்களது கருத்துக்களை மட்டுமே வெளியிட முடியும் நிலையில் பேஸ்புக்கில் வீடியோ புகைப்படங்கள் என எதை வேண்டுமானாலும் பகிரலாம். அதற்கு அடுத்ததாக இன்ஸ்டாகிராமில் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக ரீல்ஸ் எனப்படும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் சிறப்பம்சத்தால் பலரும் இன்ஸ்டாகிராமிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

பயனர்கள் அதிர்ச்சி

பயனர்கள் அதிர்ச்சி

எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்பதைவிட இன்ஸ்டாகிராமில் எவ்வளவு ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் எவ்வளவு லைக்குகள் கிடைக்கிறது என்பதை பொறுத்து அவர் பிரபலமாகவே அறியப்படுகிறார். இதற்கு உலகளாவிய பிரபலங்களும் விதிவிலக்கல்ல. இந்த நிலையில் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் உலாவி வந்த பயனர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

திடீர் முடக்கம்

திடீர் முடக்கம்

காரணம் கடந்த சில மணி நேரங்களாக இன்ஸ்டாகிராம் முடங்கி இருப்பதாகவும் இதனால் பெரும் அவதிக்குள்ளாகியதாக பலரும் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் பலருக்கும் உங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறது என செய்தி வந்திருக்கிறது. இதனால் என்ன காரணம் என்று தெரியாமல் பயனாளர்கள் குழம்பி உள்ள நிலையில், எங்களை சமூக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் அக்கவுண்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்டா விளக்கம்

மெட்டா விளக்கம்

இதை அடுத்து ட்விட்டரில் 'இன்ஸ்டாகிராம் ஷட் டவுன்' என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வரும் நிலையில் இந்த நிலையை சரி செய்ய முயற்சித்து வருவதாக இன்ஸ்டாகிராம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பும் உலக அளவில் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

English summary
Many users have complained that Instagram, the most popular social networking site among young people worldwide, has suddenly stopped working.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X