தர்பார் சும்மா கிழி போல்.. லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி.. இந்த பாட்டையும் காப்பியடித்தாரா அனிருத்?
Recommended Video
சென்னை: தர்பார் சிங்கிள் டிராக் போல் மாஸ்டர் படத்தில் லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி என தொடங்கும் பாடலையும் அனிருத் காப்பி அடித்துவிட்டதாக சமூகவலைதளங்களில் வைரலாகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படம் வருவதற்கு முன்பே பிரபலமடைந்துவிட்டது. பிகில் பட வசூல் தொடர்பாக நெய்வேலியில் நடந்த இந்த படப்பிடிப்பிலிருந்து இளைய தளபதி, அதிகாரிகளால் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்த நிலையில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்.

ஆடம்பரம்
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் முதல் சிங்கிள் டிராக் கடந்த 14-ஆம் தேதி வெளியானது. இது தொடர்பாக சோனி நிறுவனம் வெளியிட்ட போஸ்டரில் ஆட்டம் ஆரம்பரம் என்றும் ஒரு குட்டி கதை வெய்ட்டிங் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி என தொடங்கும் பாடல் வெளியானது.

பாடல்
ஏராளமான ஆங்கில வார்த்தைகளுடன் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை பாடியவர் நடிகர் விஜய். பிகில் படத்திலும் வெறித்தனம் பாடலை பாடி ஹிட்டாக்கியுள்ளார். இந்த நிலையில் இந்த பாடலையும் அனிருத் காப்பி அடித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த பாடலின் ஆதி அந்தத்தையும் ஹேட்டர்கள் கண்டுபிடித்து பரப்பி வருகின்றனர்.

காப்பி
இந்த பாடல் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான ராஜகாளியம்மன் திரைப்படத்தில் வரும் "சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன்" என தொடங்கும் பாடலை போல் உள்ளதாக பகிர்ந்து வருகின்றனர். இந்த பாடலை வடிவேல் பாடியிருந்தார். தர்பாரை போல் இந்த பாடலையும் அனிருத் காப்பி அடித்துவிட்டாரா என சோஷியல் மீடியாக்கள் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன.
— Lone wolf (@mrtnrx) February 16, 2020 |
சும்மா கிழி பாடல்
தர்பார் படத்தின் சும்மா கிழி பாடலும் இது போல் காப்பி அடிக்கப்பட்டதாகவே அந்த பாடல் டிராக் வெளியான போது கூறப்பட்டது. அந்த பாடல் தண்ணீ குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தால் பாடலையும் ஐயப்ப பாடலான கட்டோடு கட்டு முடி பாடலையும் சாயலாக கொண்டிருந்தது என கூறப்பட்டது. இந்த பாடலை எஸ் பி பாலசுப்பிரமணியன் பாடியுள்ளார். இசைக்கு எல்லையே இல்லை என்பதால் எல்லாமே காப்பி அடித்தது என நம்மால் சொல்ல முடியாது. பலரது உழைப்பில் பாடல்கள் உருவாகின்றன என்றும் சிலர் ஆதரவாக வாதம் செய்கின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications