• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தி திணிப்பு - தாழையூர் தங்கவேல் தீக்குளிப்பு மரணமே இறுதியாக இருக்கட்டும்: வைகோ வீரவணக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தீக்குளித்து மாண்ட திமுக நிர்வாகி தாழையூர் தங்கவேலுக்கு மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ வீரவணக்கம் செலுத்தி உள்ளார்.

இந்தி திணிப்புக்கு எதிராக 1938-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு யுத்தம் ஜனநாயக வழியில் நடைபெற்று வருகிறது. 1938-ம் ஆண்டு முதலாவது இந்தி ஆதிக்க எதிர்ப்பு போரில் தாளமுத்து, நடராசன் சிறையிலேயே மாண்டு போயினர். பின்னர் நாடு விடுதலை அடைந்த காலம் முதல் இன்று வரை இந்தி திணிப்பு நடவடிக்கைகள் தொடருகின்றன.

1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் உக்கிரமான போரை நடத்தியது. பல லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடினர். இந்தி திணிப்புக்கு எதிராக தீக்குளித்து மாண்டவர்கள், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணற்றோர். வீரம் செறிந்த தமிழரின் இந்தி எதிர்ப்பு போர் இன்னமும் ஓயவில்லை.

தமிழர்களை எரிக்கும் “இந்தீ”.. சின்னசாமி முதல் தங்கவேல்! 100ஐ தொட்ட பலி.. ஓயாத திணிப்பும் எதிர்ப்பும் தமிழர்களை எரிக்கும் “இந்தீ”.. சின்னசாமி முதல் தங்கவேல்! 100ஐ தொட்ட பலி.. ஓயாத திணிப்பும் எதிர்ப்பும்

தாழையூர் தங்கவேல் தீக்குளிப்பு

தாழையூர் தங்கவேல் தீக்குளிப்பு

இப்போதும் மத்திய பாஜக அரசு இந்தி திணிப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக மேட்டூர் அடுத்த பி. என். பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு தாழையூர் தங்கவேல், தீக்குளித்து மாண்டார். இந்திக்கு எதிராக உயிர் நீர்த்த தாழையூர் தங்கவேல், திமுகவின் நங்கவள்ளி முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர். தாம் தீக்குளிப்பதற்கு முன்னதாக, மோடி அரசே! மத்திய அரசே! அவசர இந்தி வேண்டாம். தாய்மொழி தமிழ் இருக்க, இந்தி கோமாளி எதுக்கு , இந்தி எழுத்து மாணவ மாணவிகள் வாழ்க்கை பாதிக்கும்! இந்தி ஒழிக! இந்தி ஒழிக! என எழுதிவைத்து தீக்குளித்தார் தாழையூர் தங்கவேலு. அவரது தீக்குளிப்பு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 உயிரிழப்பு வேண்டாம்- முதல்வர் ஸ்டாலின்

உயிரிழப்பு வேண்டாம்- முதல்வர் ஸ்டாலின்

தாழையூர் தங்கவேல் தீக்குளிப்புக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.கஸ்டாலின், இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு வீரவணக்கம்! இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல்ரீதியாக - ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம்! ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது! போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

இந்தி திணிப்பு நிறுத்தப்படுமா? -வைகோ

இந்தி திணிப்பு நிறுத்தப்படுமா? -வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டம், நங்கவள்ளி பகுதியில் உள்ள தாழையூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக விவசாய அணியின் முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளரான தங்கவேல் என்பவர் ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை தாள முடியாமல் இன்று காலையில் தி.மு.கழக அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளித்து மாண்டார் என்ற செய்தி கேட்டு பெரிதும் அதிர்ச்சியும் ஆராத் துயரமும் கொண்டேன்.
இந்தி ஆதிக்கத்தினை எதிர்த்து கீழப்பழுவூர் சின்னச்சாமியை பற்றி உயிர் குடித்த தீ, இன்று தங்கவேல் அவர்களின் உயிரையும் பறித்தெடுத்த கொடுமையை எவ்வாறு தாங்கிக்கொள்வது. ஒன்றிய பா.ஜ.க. அரசு இவைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து நடக்குமா? இந்தித் திணிப்பை, சமஸ்கிருத மொழி திணிப்பை நாள்தோறும் செய்து வருவதை நிறுத்திக்கொள்ளுமா? என்ற உணர்வு தமிழ் மக்களின் நெஞ்சில் தணலாய் கொதித்து எழுகிறது.

 தங்கவேலு தீக்குளிப்பு- வீரவணக்கம்

தங்கவேலு தீக்குளிப்பு- வீரவணக்கம்

அன்னைத் தமிழ் மொழியைக் காப்பதற்காக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தி, சமஸ்கிருத மொழிகளின் வல்லாதிக்கத்தை நிறுத்துவதற்காக தீக்குளித்து தன் மூச்சை நிறுத்திக்கொண்ட அந்தத் தியாக மறவன் தங்கவேல் அவர்களுக்கு என் வீர வணக்கத்தை தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன், இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.கழக தலைவருமான மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் "ஏற்கனவே ஏராளமான தீரர்களை நாம் இழந்துவிட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது. போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்" என்று மனம் நெகிழ்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையை நான் வழிமொழிகிறேன்.

இறுதி மரணமாக இருக்கட்டும்

இறுதி மரணமாக இருக்கட்டும்

தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் வேலையில் ஈடுபட்டு மாபெரும் இழப்பை அளிக்கும் வகையில் எவரும் ஈடுபட வேண்டாம். தாழையூர் தங்கவேல் அவர்களின் தீக்குளிப்பு மரணமே இறுதியாக அமையட்டும் என்று தமிழ் உறவுகளிடம் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். ஆதிக்க வெறியோடு இந்தியையும், சமஸ்கிருத மொழியையும் திணிக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளை நாம் ஒன்றிணைந்து போராடி வெற்றி காண்பதே தாழையூர் தங்கவேல் போன்ற இந்தி எதிர்ப்பு தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கமாகும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK Chief Vaiko has appealed for calm after self-immolate against Union BJP Govt's Hindi imposition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X