“அஜித் மேல கேஸ் போடுங்க..” உயிர் பறித்த ரசிகரின் ‘துணிவு’! விஜய்போல் திருந்துங்க -பால் முகவர் சங்கம்
சென்னை: துணிவு திரைப்படத்தின் வெளியீட்டின்போது அஜித் ரசிகர் ஒருவர் லாரியின் மீது ஏறி நடனமாடிய சமயத்தில் கீழே விழுந்து மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பொறுப்பற்ற தன்மைக்காக நடிகர் அஜித்குமார் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, "நடிகர் அஜீத்குமார் அவர்களின் நடிப்பில் இன்று (11.01.2023) வெளிவந்துள்ள "துணிவு" திரைப்பட வெளியீட்டினை சென்னை, கோயம்பேடு, ரோகிணி திரையரங்கில் அதிகாலை வேளையில் ரசிகர்கள் கொண்டாடினர்.
அப்போது சாலையில் சென்ற லாரியில் ஏறி நடனமாடிய பரத்குமார் என்கிற 19 வயது ரசிகர் ஒருவர் கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடம் உடைந்து நிகழ்விடத்திலேயே பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது.

நடிகர் அஜித்துக்கு கண்டனம்
ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டதாக கூறி தொடர்ந்து ரசிகர்களை புறக்கணித்து அவர்களை நல்வழிப்படுத்த தவறும் நடிகர் அஜித்குமார் அவர்களின் பொறுப்பற்ற தன்மைக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை இங்கு தெரிவித்துக் கொள்கிறது.

அஜித் மீது வழக்குப்பதிவு செய்யுங்க
திரைப்படத்தில் நடித்து கோடி, கோடியாய் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கும் அவர் மீது தமிழ்நாடு அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மரணமடைந்த ரசிகரின் குடும்பத்திற்கு அஜித்குமார் அவர்கள் ஒருகோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதோடு, தனது பொறுப்பற்ற தன்மைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

பாலாபிஷேகம் செய்யும் அஜித் ரசிகர்கள்
கடந்த 2016 ஆம் ஆண்டிலேயே கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி எங்களின் சங்கத்தின் சார்பில் எல்லா முன்னணி நடிகர்களுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்து வருகிறோம். அஜித் நடிப்பில் விவேகம் திரைப்படம் வெளியானபோது அவரது மேலாளர் சுரேஷ் சந்திராவை தொடர்புகொண்டு அஜித்தை சந்திக்க அனுமதி கேட்டோம்.

அஜித்திற்கு ரசிகர் மன்றம்
அப்போது அவருக்கு ரசிகர் மன்றங்கள் கிடையாது. எனவே அவர் எந்தவிதமான அறிவிப்பை வெளியிட மாட்டார்கள் என்றார். ரசிகர் மன்றங்கள் இல்லை என்றாலும் உலகம் முழுவதும் அஜித் ரசிகர்கள் உள்ளார்கள். அவருடைய செயல்பாடுகள், நடை, உடை, பாவனை எல்லாவற்றையும் பின்பற்றக்கூடிய ரசிகர்கள் இருந்துகொண்டு இருக்கிறார்கள்.

வலிமை ரிலீஸ்
2019 ஆம் ஆண்டில் விஸ்வாசம் திரைப்படம் வெளியானபோது விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் கட் அவுட் மேல் ஏறி பாலாபிஷேகம் செய்தபோது 5 இளைஞர்கள் கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். 2022 ஆம் ஆண்டு வலிமை திரைப்படம் வெளியானபோது இதே சென்னை கோயம்பேடு ரோகினி திரையரங்கம் அருகே சென்ற பால் விநியோக வாகனத்தை மறித்து பாலையும், தயிரையும் திருடி அபிஷேகம் செய்தார்கள்.

நடுத்தெருவில் நிற்கும் ரசிகர் குடும்பம்
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது நடிகர் அஜித்திற்கு தன்னுடைய ரசிகர்களை நல்வழிப்படுத்த வேண்டும், இளம் தலைமுறை தடம் மாறி செல்லக்கூடாது என்ற எந்த விதமான நல்ல எண்ணமும் இல்லை. இந்த நிலையில் 19 வயது இளைஞர் உயிரிழந்து உள்ளார். அவரது குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் அவல நிலையை பார்க்கிறோம். ரசிகர்களை நல்வழிப்படுத்தக்கூடிய எந்த நடிகராக இருந்தாலும் அவர்கள் திரைத்துறையில் இருக்க தகுதியற்றவர்கள்.

மற்ற நடிகர்களை பாருங்க
நடிகர் விஜய் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று கூறி இரத்த தானத்தை வலியுறுத்தி வருகிறார். கமல்ஹாசன் பல ஆண்டுகளுக்கு முன்பே பாலாபிஷேகத்தை தடுத்து ரத்ததானம், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி வருகிறார். சிவகார்த்திகேயனும் மரக்கன்று நடுவது, ஹெல்மெட் கொடுப்பது என உதவுகிறார். ஆனால், அஜித் மட்டும் ரசிகர் மன்றம் இல்லை என காரணம் சொல்லி வருகிறார்." என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications