சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேக்சின் செலுத்தினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுமா? அமைச்சர் சக்கரபாணி முக்கிய விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளிலும் வேக்சின் கட்டாயமாக்கப்படுவதாகவும் வேக்சின் போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது எனக் கூறப்படும் நிலையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இது குறித்து முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

Recommended Video

    தமிழ்நாட்டில் விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு... அமைச்சர் சக்கரபாணி உறுதி

    கடந்த சில நாட்களாகவே உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது என்றால் அது ஓமிக்ரான் உருமாறிய கொரோனா தான்.

    நாகாலாந்து: 3 முறை ராணுவம் துப்பாக்கிச் சூடு - பொதுமக்கள் 14 பேர் பலி- அமித்ஷா விளக்கம் நாகாலாந்து: 3 முறை ராணுவம் துப்பாக்கிச் சூடு - பொதுமக்கள் 14 பேர் பலி- அமித்ஷா விளக்கம்

    தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா, இதுவரை 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது.

    ஓமிக்ரான் கொரோனா

    ஓமிக்ரான் கொரோனா

    இந்த ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டு சில நாட்கள் மட்டுமே ஆவதால் இது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. இருப்பினும், உலக சுகாதார அமைப்பு இதைக் கவலைக்குரிய. கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளிலும் புது புது கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கூட ஆபத்தான நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மெகா தடுப்பூசி முகாம்

    மெகா தடுப்பூசி முகாம்

    தற்போது நம்மிடம் உள்ள கொரோனா வேக்சின்களுக்கு இந்த வைரஸ் தப்பிக்கும் எனக் கூற எந்தவொரு ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், பொதுமக்கள் அனைவரும் முடிந்தவரை விரைவாக வேக்சின் போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கொரோனா வேக்சின் பணிகளைக் கடந்த சில மாதங்களாகவே மத்திய மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    வேக்சின் கட்டாயமா

    வேக்சின் கட்டாயமா

    மதுரையில் விடுதிகள், ஷாப்பிங் மால், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 18 இடங்களில் வேக்சின் போடாதவர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் டாஸ்மாக் செல்ல வேக்சின் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இதேபோல ரேஷன் கடைகளிலும் வேக்சின் கட்டாயமாக்கப்படுவதாகவும் வேக்சின் போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது எனத் தகவல்கள் பரவின.

    அமைச்சர் விளக்கம்

    அமைச்சர் விளக்கம்

    இது பொதுமக்களிடையே சற்று சலசலப்பை உண்டாக்கியது. இந்தச் சூழலில் திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "கொரோனா வேக்சின் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால், கொரோனா வேக்சின் செலுத்தினால் மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்ற பரவும் தகவல் உண்மை அல்ல. அது வதந்தி. இது தொடர்பாகத் தமிழக அரசு எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை" என்று கூறினார்.

    நெல் கொள்முதல்

    நெல் கொள்முதல்

    தொடர்ந்து நெல் கொள்முதல் குறித்துப் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "திருவாரூரில் மட்டும் 39000 மெட்ரிக் டன் நெல் நேரடிக் கொள்முதல் செய்யப்படும் அளவுக்கு நிலையங்கள் உள்ளன. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனடியாக அவைக்கு எடுக்க அரிசி ஆலை உரிமையாளர்களிடம் வலியுறுத்தியுள்ளோம். டெல்டா பகுதிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் 3 லட்சம் மெட்ரிக் டன் குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    ஒரே நாடு ஒரு ரேஷன்

    ஒரே நாடு ஒரு ரேஷன்

    ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் முறை என்பது மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இத்திட்டம் 97% செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது. வேறு மாநில மக்கள் ரேஷன் பொருட்களில் தங்களுக்கான பொருட்கள் கிடைக்கவில்லை எனப் புகார் அளித்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

    English summary
    minister sakkarapani latest press meet about free rations. Coronavirus latest news in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X