'கேள்வி நேரம் என்பதால் அடக்கி வாசிக்கிறோம்'.. அதிமுக எம்எல்ஏவால் சீறிய சேகர்பாபு.. கோபம்! என்னாச்சு?
சென்னை: அதிமுக எம்எல்ஏ அர்ஜுனனுக்கு அமைச்சர் சேகர் பாபு இன்று அவையில் காட்டமாக பதில் அளித்தார்.
தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். இன்று கேள்வி நேரத்தில் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்து வந்தார்.
இதில் அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன், மருதமலை கோவிலில் கம்பி வட ஊர்தி அமைப்பது தொடர்பான கேள்வியை எழுப்பினார்.

சேகர் பாபு
இந்த நிலையில் இன்று அவையில் அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், மருதமலை முருகன் கோவிலுக்கு கம்பி வட ஊர்தி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு மண் பரிசோதனை செய்யும் போது, அங்கே கம்பி வட ஊர்தி அமைக்க முடியாத நிலை உள்ளது. மண் வலிமையாக இல்லை என்பது தெரிந்தது. இதனால் அங்கு கம்பி வட ஊர்தி அமைக்கும் பணியை மேற்கொள்ள முடியாது என்று கூறினார்.

மின் தூக்கி
இதையடுத்து அதிமுக எம்எல்ஏ மின் தூக்கி அமைக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு சேகர் பாபு, கம்பி வட ஊர்தி இல்லை என்றதும் நீங்கள் மின் தூக்கி கேட்பீர்கள் என்று தெரியும். இது தெரிந்துதான் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் கடந்த ஆண்டு 30/12 அன்று அந்த கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தோம். அங்கு திருக்கோவில் மலைப்பாதை முடியும் இடத்தில், சுமார் 20.4 மீட்டர் கொண்ட 100 படிக்கட்டுகளை ஏறி தரிசனம் செய்வது கடினமாக இருப்பதை கண்டறிந்தோம்.

மின் தூக்கி சேகர் பாபு
இதையடுத்து வல்லுநர் குழுவை வைத்து ஆய்வு செய்தோம். 11 பேர் கொண்ட குழுவை அமைத்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதன்பின்னர் சுமார் 3 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் அங்கு மின் தூக்கி அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அடுத்த மாதத்திற்கு உள்ளாக இந்த பணிகளை முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைப்பார். கேளாததையும் கேட்டு முடிவு எடுக்கும் வேகம் கொண்டவர் முதல்வர் என்று அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டார்.

அதிமுக ஆட்சி
இதையடுத்து பேசிய அதிமுக எம்எல்ஏ, கம்பி வட ஊர்தி கொடுக்க முடியாது என்று அமைச்சர் கூறிவிட்டார். ஆறுபடை வீடுகளுக்கு அடுத்த 7வது படை வீடாக மருதமலை உள்ளது. அமைச்சர் இங்கு உண்மைக்கு புறம்பாக பேசுகிறார். அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 3.40 கோடி ரூபாயில் இங்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு, மின் தூக்கி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அது அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டது.

கிராம பழமொழி
ஆனால் அந்த மின் தூக்கி அமைக்க நீங்கள் டெண்டர் விட்டது போல பேசுகிறீர்கள். கிராமத்தில் பழமொழி சொல்வது போல.. மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்று சொல்வது போல.. யார் உடைத்தாலும் சரி,. மக்களுக்கு நல்லது நடந்தால் சரி என்று எம்எல்ஏ அர்ஜுனன் கூறினார். இதையடுத்து கோபமாக பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, கேள்வி நேரத்தில் குற்றச்சாட்டு வேண்டாம் என்பதால் அடக்கி வாசிக்கிறோம்.

சேகர் பாபு கோபம்
நாங்கள் பேச நினைத்தால் நிறைய சொல்லலாம். பிப்ரவரி 26ம் தேதி செயல்பாட்டிற்கு வராத பணிகள் அனைத்தையும் முதல்வர் அவர்கள் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துவிட்டார். நான் சொன்னதை அதிமுக எம்எல்ஏ கேட்கவில்லை, என்று நினைக்கிறேன். மருதமலையில் கம்பி வட ஊர்தி அமைக்க முடியாது. அங்கு மண் வலிமையாக இல்லை. இதனால் மின் தூக்கி போட டெண்டர் விடப்பட்டது. உங்கள் ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் கைவிடப்பட்டுவிட்டது. சிங்கிள் டெண்டர் என்பதால் உங்கள் ஆட்சியிலேயே அது கைவிடப்பட்டது.

மின் தூக்கி அமைக்கப்படும்
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் அங்கு கள ஆய்வு நடத்தினோம். அதன்பின் அங்கு மின் தூக்கி அமைக்க டெண்டர் மீண்டும் விடப்பட்டது. உங்கள் ஆட்சியில் கைவிடப்பட்ட டெண்டர் எங்கள் ஆட்சியில் மீண்டும் விடப்பட்டு, அனைத்து ஒப்பந்தங்களும் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மின் தூக்கி செயல்பாட்டிற்கு வரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று சேகர் பாபு காட்டமாக பதில் அளித்தார். இதையடுத்து அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் எதிர்த்து பேசாமல் அமர்ந்தார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications