சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாடு முழுக்க புது டீம்! உதயநிதி போட்ட உத்தரவு! ஆஹா எதிர்பார்க்கலையே! திரும்பி பார்த்த சீனியர்ஸ்

Google Oneindia Tamil News

சென்னை: விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டிருக்கும் உத்தரவு ஒன்று திமுக நிர்வாகிகள், சீனியர்கள் இடையே பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு, இளைஞர் நலன் துறைக்கு அமைச்சராகி இருக்கிறார்.

இந்த நிலையில் அமைச்சர் பணி மட்டுமின்றி கட்சி ரீதியான பணிகளையும் உதயநிதி ஸ்டாலின் கவனித்து வருகிறார். சமீபத்தில் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடிக்கு சிந்தடிக் ஓடுதளத்தை புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

கறுப்பின மக்களின் அடையாளம்.. கால்பந்து விளையாட்டின் மன்னன்.. முடிவுக்குவந்த பீலேவின் வாழ்க்கை பயணம்! கறுப்பின மக்களின் அடையாளம்.. கால்பந்து விளையாட்டின் மன்னன்.. முடிவுக்குவந்த பீலேவின் வாழ்க்கை பயணம்!

கோவை நிகழ்வு

கோவை நிகழ்வு

அதன்பின் பல்வேறு விளையாட்டு வீரர்களை அங்கு சந்தித்து பேசினார். அதேபோல் அங்கு உள்ள விளையாட்டு விடுதிகளை பார்வையிட்டார். அதன்பின் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் மூலம் கோவையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை செய்தார். இதில் சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை முதல்வரிடம் இருந்தது. இந்த துறைதான் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பல்வேறு கூட்டங்களையும் அவர் நடத்தினார்.

பதவிகள்

பதவிகள்

இந்த நிலையில்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டிருக்கும் உத்தரவு ஒன்று திமுக நிர்வாகிகள், சீனியர்கள் இடையே பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அதன்படி திமுகவில் இளைஞரணி சார்பாக மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வெளிமாநிலங்களில் இருக்கும் இளைஞரணியின் மாநில அமைப்பாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான நியமங்களுக்கான விண்ணப்பங்களை உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார். இந்த விண்ணப்பங்களுக்கான தேதி முடிந்த நிலையில், விரைவில் இதற்கான நேர்காணல் விரைவில் நடக்க உள்ளது. இந்த நேர்காணலை உதயநிதி ஸ்டாலின் நடத்த உள்ளார்.

எப்படி நடக்கும்?

எப்படி நடக்கும்?

இந்த உத்தரவுதான் திமுக நிர்வாகிகள், சீனியர்கள் இடையே பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் திமுகவில் இளைஞரணி தனி பிரிவாக இருந்தாலும், இளைஞரணியின் மாவட்ட நிர்வாகிகளை பொதுவாக மாவட்ட செயலாளர்கள்தான் தேர்வு செய்வார்கள். தங்கள் மாவட்டங்களில் தங்களுக்கு கீழ் வேலை செய்யும் நபர்களை தேர்வு செய்வார்கள். மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்து அனுப்பும் லிஸ்டை பொதுவாக இளைஞரணி அப்படியே எதிர்கொள்வதுதான் வழக்கமாக இருந்து வந்தது.

இந்த முறை மாற்றம்

இந்த முறை மாற்றம்

ஆனால் இந்த முறை அந்த வழக்கம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இளைஞரணியின் மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், துணை பொறுப்பாளர்கள் எல்லோரையும் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்கிறார். உதயநிதி ஸ்டாலின் நேர்முக தேர்வு மூலம் இவர்களை தேர்வு செய்ய உள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு முழுக்க உதயநிதி ஸ்டாலினின் கீழ், அவர் தேர்வு செய்த டீம் களமிறக்கப்பட உள்ளது. மொத்தமாக அந்த டீமே அவருக்கு கீழ் புதிதாக திமுகவில் களமிறக்கப்பட்ட உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் இந்த மூவ் திமுக சீனியர்களை திரும்பி பார்க்க செய்துள்ளது. இளைஞரணியில் ஸ்டாலின் செயலாளராக இருந்த போது கூட நேர்காணல் செய்தாலும் மாவட்ட செயலாளர்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு இருந்தார். ஆனால் முதல்முறையாக உதயநிதி பரிந்துரைக்கு இடம் கொடுக்காமல் நேரடியாக நிர்வாகிகளை தேர்வு செய்கிறார்.

English summary
Minister Udhayanidhi Stalin important announcement inside the DMK party on Youth wing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X