லோக்சபா சீட்.. அப்படியே அமைச்சர் பதவி? லட்டு மாதிரி பாஜக தந்த ஆபர்.. விஜயதாரணி மாஸ்டர் பிளான்
சென்னை: பாஜகவில் இணைந்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணிக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் என்று பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் சிட்டிங் எம்எல்ஏ ஒருவர் காங்கிரசில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்துள்ளார்.

கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி. ஆனால் இவர் மட்டுமின்றி இன்னும் சிலர் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜக பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
வாய்ப்பு இல்லை: காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விஜயதாரணி முயன்று உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளதால் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதியை ஒதுக்க காங்கிரஸ் மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதி எம்எல்ஏ விஜய் வசந்த் தொகுதியில் போட்டியிட்டு தேசிய அரசியலுக்கு செல்ல இவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதியை ஒதுக்க காங்கிரஸ் மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அவர் பாஜகவில் இணைந்துவிட்டார் என்கிறார்கள். இதனால் பாஜகவில் இவருக்கு தென் மண்டலத்தில் இருந்து லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்கிறார்கள்.
என்ன சொன்னார்?: கட்சி மாறியது தொடர்பாக பேசிய விஜயதாரணி, சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன்; தற்போது பாஜகவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது;
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன்; தமிழ்நாட்டில் பாஜகவை வலுபெற வைப்போம்; தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது; பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது, என்று கூறியுள்ளார்.
அண்ணாமலை வரவேற்பு; பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக செய்துள்ள போஸ்டில் , காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, இன்று பாஜகவில் இணைந்துள்ளார்; விஜயதரணியை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழ்நாடு பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.
பாஜக ஆபர்: பாஜக கட்சி சார்பாக லோக்சபா தேர்தலில் இவர் களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. விஜயதாரணிக்கு கன்னியாகுமரியில் களமிறங்கும் வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இவர் விளவங்கோடு எம்எல்ஏவாக இருப்பதால்.. கட்சி தாவல் தடை சட்டத்தின்படி அவரின் எம்எல்ஏ பதவி காலியாகும்.
இதனால் அங்கே இடைத்தேர்தல் நடக்கும். இந்த தேர்தலில் விஜயதாரணி களமிறங்க வாய்ப்புகள் குறைவு. இதனால் அவர் லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரியில் இருந்து களமிறங்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய அரசியலில் களமிறங்கும் வாய்ப்பை பாஜக லட்டு மாதிரி கொடுக்கும் என்பதால் விஜயதாரணி பாஜக பக்கம் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு லோக்சபா தேர்தலில் வென்றால் பாஜக வெல்லும் பட்சத்தில் அப்படியே மத்திய அமைச்சர் பதவியும் கிடைக்கும் என்று விஜயதாரணி கணக்கு போட்டு இருக்கலாம் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications