சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இளைஞர்களே! நாமே தீர்வாக மாறுவோம். சென்னையை காக்க இயக்கம்.. கமல் ஹாசன்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறியுள்ள கமல், நாமே தீர்வாக மாறுவோம் என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நாள்தோறும்சென்னையில் மட்டும் 1000 பேருக்கு மேல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

Naame Theervu: kamal haasan request to youth should come covid prevention work

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த 'நாமே தீர்வு' என்ற இயக்கத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தொடங்கி உள்ளார். விருப்பம் உள்ளவர்கள் இந்த இயக்கத்தில் இணைந்து சென்னை மக்களுக்கு உதவ முன்வரலாம் என்று கூறியள்ளார்..

மேலும், ''சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் என்றுதான் இருக்க வேண்டும். அது கொரோனாவில் தலைநகராக இருந்து விடக்கூடாது'' என்று கூறியுள்ளார்.

கமல் ஹாசன் தனது டுவிட்டவர் பக்கத்தில் ''கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இளைஞர்களே!

நாம் இணைந்து உழைத்தால், பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம்!

நாமே தீர்வாக மாறுவோம்.

#நாமேதீர்வு
#NaameTheervu
இணைந்து மீட்போம் சென்னையை...
Call 6369811111

என்று பதிவிட்டுள்ளார்.

இன்னொரு டுவிட் பதிவில்,கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட, பொருளாதார வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் அதிகம்.

தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்களே... வாருங்கள், பல வீடுகளுக்கு நம்பிக்கை வெளிச்சமாக அமைவோம்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட, பொருளாதார வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் அதிகம்.

தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்களே... வாருங்கள், பல வீடுகளுக்கு நம்பிக்கை வெளிச்சமாக அமைவோம்!
#நாமேதீர்வு
#NaameTheervu
இணைந்து மீட்போம் சென்னையை...
Call 6369811111 " என்று கூறியுள்ளார்.

பள்ளி கல்வித்துறையில் அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி.. பள்ளி கல்வித்துறையில் அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி..

English summary
Naame Theervu: kamal haasan request to youth should come covid prevention work. kamal said The number of people who suffer from negligence is higher than those who suffer from coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X