"நயினாரை" கவனிச்சீங்களா.. 2 தவறுகள்.. "அவரால்" மட்டுமே முடியுமாம்.. டென்ஷனில் அறிவாலயம்

நயினார் நாகேந்திரன் திமுகவை கடுமையாக விமர்சித்து பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவின் அண்ணாமலையை பாராட்டி, கூடவே திமுகவை சீண்டி, நயினார் நாகேந்திரன் தந்துள்ள பேட்டி, ஆளும் கூட்டணி அரசுக்கு எரிச்சலை கூட்டி வருகிறது.

நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை ஜெயலலிதாவின் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர்... அவரது மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டதும் டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர்.

அது மட்டுமல்ல.. உடனடியாக அவருக்கு கட்சியில் மாநிலத் துணை தலைவர் பதவியும் வழங்கப்பட்டது அப்போதே அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

 நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

தற்போது இவர் நெல்லை பாஜகவின் வெற்றிபெற்ற ஒரு எம்எல்ஏவாக உள்ளார்.. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் பேசிய பேச்சு, தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.. "இப்போது வரை அதிமுக எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் செயல்படவில்லை.. அப்படி செயல்படுவதையம் பார்க்க முடியவில்லை.. அதிமுக மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை.. எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பாஜகவின் அண்ணாமலை மட்டுமே துணிச்சலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.. எதிர்கட்சியாக இல்லையென்றாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டிக்கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே..

 நயினார் சர்ச்சை

நயினார் சர்ச்சை

எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது இருந்த எழுச்சியை போன்றே இப்போது பாஜக உள்ளது.. இந்த சட்டமன்ற தேர்தலில் 2 தவறுகளை அதிமுக செய்துவிட்டது.. இல்லாவிட்டால், இந்நேரம் பாஜக துணையோடு ஆட்சியை அமைத்திருக்கும்.. வருங்காலத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும்" என்று பேசியிருந்தார்.. ஒரு மூத்த தலைவர் நயினரா இப்படி பேசியது என்ற அதிர்ச்சி நீண்ட காலமாகவே அதிமுக விலகவே இல்லை.. கூட்டணி வைக்க மனமினல்லாத அளவுக்கு அந்த, பேச்சு அதிமுக மேலிடத்தை ரொம்பவே உலுக்கி எடுத்துவிட்டது.

 நயினார் பேச்சு

நயினார் பேச்சு

நயினார் பேசியதற்கு அண்ணாமலை, நேரடியாகவே சென்று அதிமுக தலைமையை சமாதானம் செய்தபோதும், அந்த கோபம் நீங்கவில்லை.. ஆனால், நயினார் நாகேந்திரனோ, இப்போது வரை அண்ணாமலையை பாராட்டுவதை விடவில்லை.. இன்றுகூட அவரை புகழ்ந்து ஒரு பேட்டி தந்துள்ளார்.. கூடவே, திமுகவையும் டேமேஜ் செய்துள்ளார்.. விழுப்புரத்தில், பாஜக 8 ஆண்டு கால ஆட்சி சாதனை விளக்க கூட்டம் நடந்தது.. இதில் கலந்து கொண்ட நயினார் பேசியதாவது:

சலசலப்பு

சலசலப்பு

"ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கியதுதான் பிரதமர் மோடியின் சாதனை... நிலையான ஆட்சியை நாட்டுக்கு வழங்கிய பிரதமர் மோடி மட்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால், நம்முடைய நிலை என்னாகியிருக்கும்? பெரும் பாதிப்பை சந்தித்திருக்கும். குடும்ப ஆட்சி என்பது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமே இலங்கைதான்... திமுக ஒரு பலமில்லாத கட்சியாக திகழ்ந்து வருகிறது.. அதனால்தான், தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சி நடத்தி விடலாம் என்று கணக்கு போடுகிறது.

 சபாஷ் அண்ணாமலை

சபாஷ் அண்ணாமலை

அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு குழந்தைகளும், இளைஞர்களும் பாஜகவின் ஆதரவு நிலைக்கு வந்துவிட்டனர்.. இதனால் பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கும் நிலையும் ஏற்பட்டுவிட்டது.. ஆனால், மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசோ, ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்துவருகிறது... கச்சத்தீவை தாரை வார்த்தது அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியும், முதல்வராக இருந்த கருணாநிதியும்தான்...

 இதான் நடக்க போகுது

இதான் நடக்க போகுது

ஆனால் இன்றைக்கு திமுக அரசு கச்சத்தீவை மீட்போம் என்று வாக்குறுதி தருகிறது.. அவர்களால் கச்சத்தீவை மீட்க முடியாது... பிரதமர் மோடி மனது வைத்தால்தான் மட்டுமே கச்சத்தீவை மீட்க முடியும்... கச்சத்தீவை மீட்கும் காலம் ஒன்று வரும்... இந்த 8 வருடங்களில் ஆட்சியை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி, இன்னும் 80 வருடங்களானாலும் தொடர்ந்து நீடிக்கும்" என்றார்... மறுபடியும் ஆட்சியை சீண்டி நயினார் பேசியுள்ளது, திமுகவுக்குள் கடுப்பை கிளப்பி விட்டு வருகிறது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+