சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ தேசிய கருத்தரங்கம்.. தமிழக எம்பிக்கள் பங்கேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மகத்துவத்தை அறியும் தேசிய கருத்தரங்கம் நாமக்கல்லில் நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை பட்டதாரிகள் மற்றும் மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்கில் எம்பிக்கள் ராஜேஷ் குமார் மற்றும் சின்ராஜ், சுற்றுலா அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

National conference of medical value through Yoga and Naturopathy

இவர்களுடன் இந்திய சுற்றுலா கழகத்தின் அதிகாரி மோனிகா பிரகாஷ் கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கில் 3000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அறிவியல் சார்ந்த கருத்தரங்கள் நடந்தன. யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலம் எப்படி எல்லாம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மருத்துவர்களும் தங்களுடைய அனுபவங்கள் பகிர்ந்து கொண்டனர்.

National conference of medical value through Yoga and Naturopathy

இயற்கை மருத்துவத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் வாழ்வியலை எப்படியெல்லாம் மேன்மைப்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து கருத்தரங்கில் சொல்லப்பட்டது. எந்த மாதிரியான நோய்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படலாம் என்பது குறித்து பேசப்பட்டது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் மாணவர்கள் அறிவியல் பூர்வமான சில விஷயங்களை கற்றுக் கொண்டனர்.

பொதுமக்களுக்கு யோகா பயிற்சிகளும் செய்து காண்பிக்கப்பட்டன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை மூலிகை பானங்கள் கொடுக்கப்பட்டன. கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

English summary
National conference of medical value through Yoga and Naturopathy is held in Namakkal to discuss about scientific proofs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X