Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சில மாணவர்களை சிறைக்கும் பலரை கல்லறைக்கும் அனுப்பிய நீட் எனும் பலிபீடம்-முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை

சில மாணவர்களை சிறைக்கும் பல மாணவர்களை கல்லறைக்கும் நீட் தேர்வு அனுப்பியுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு தனியார் பயிற்சி மையங்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், சில மாணவர்களை சிறைக்கும் பல மாணவர்களை கல்லறைக்கும் நீட் தேர்வு அனுப்பியுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் வேதனையுடன் தெரிவித்தார்.

Recommended Video

    TN Assembly | தமிழக சட்டப்பேரவை - சிறப்புக்கூட்டம் | NEET | 08-02-2022

    தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று காலை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது. நீட் விலக்கு மசோதவை திருப்பி அனுப்பியது குறித்த காரணங்களை ஆளுநர் ஆர்.என். ரவி எழுதிய கடிதத்ததை சட்டசபையில் சபாநாயகர் வாசித்தார்.

    நீட் விலக்கு மசோதவை சட்டசபையில் மீண்டும் அமைச்சர் ம.சுப்ரமணியன் தாக்கல் செய்தார். இதனையடுத்து அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் தங்களின் கருத்துக்களை கூறினர். அனைவரும் நீட் விலக்கு மசோதாவை ஆதரிப்பதாக கூறினர். பாஜக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

     மு.க ஸ்டாலின்

    மு.க ஸ்டாலின்

    இதனையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் பேசினார். தமிழக சட்டசபை வரலாற்றில் இந்த நாள் முக்கியமான நாள் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். நீட் தேர்வுக்கு எதிராக மட்டும் கூட வில்லை. கூட்டாட்சி தத்துவத்தை நிலை நாட்ட கல்வி உரிமையை மீட்டெடுக்க கூடியுள்ளோம். நம்முடைய கூட்டாட்சி தத்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் கூடியுள்ளோம் என்று கூறினார். தனது பொதுவாழ்க்கையில் மறக்கப்பட முடியாத நாளாக அமைந்துள்ளதாக கூறினார் முதல்வர் ஸ்டாலின்.

     நுழைவுத் தேர்வு ஒழிப்புச் சட்டம்

    நுழைவுத் தேர்வு ஒழிப்புச் சட்டம்

    நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று நுழைவுத் தேர்வு ஒழிப்புச் சட்டம் இயற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்றதும் இந்த சட்டமன்றம்தான். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கியதும் இந்த சட்டசபைதான். அதே போல பொறியியல் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கியது இந்த சட்டமன்றம்தான் என்றும் மு.க ஸ்டாலின் கூறினார்.

    சமூக நீதியை நிலைநாட்ட வேண்டாம்

    சமூக நீதியை நிலைநாட்ட வேண்டாம்

    திமுக ஆட்சிப்பொறுப்பேற்று 8 மாதங்களுக்குள் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டியிருக்கிறோம். கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்த கல்வி உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நீட் என்ற சமூக அநீதியை அகற்ற இந்த சட்டமன்றத்தால் முடியும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமூக நீதியை நிலைநாட்டிட இந்த சட்டமன்றத்தில் கூடியுள்ளதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

    வழக்குகள்

    வழக்குகள்

    நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் 118 வழக்குகள் போடப்பட்டுள்ளன. தமிழகம்தான் முதலில் வழக்குப் போட்டது. நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு சாதகமானது. ஏழை எளிய மாணவர்களால் பணம் செலவழித்து படிக்க முடியாது. அதற்காகவே நீட் விலக்கு மசோதாவை கொண்டு வந்திருக்கிறோம். ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க தகுதியற்றவர்கள் என்று நீட் தேர்வு தடுப்பதாகவும் முதல்வர் கூறினார்.

    நீட் தேர்வில் முறைகேடு

    நீட் தேர்வில் முறைகேடு

    நீட் தேர்வில் முறைகேடு நடப்பதாக முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு. ஆள்மாறட்டம் நடைபெறுகிறது. ஆள்மாறட்டம் செய்ததாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் பலர் முறைகேடு நடப்பதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். நீட் தேர்வு ஆள்மாறட்டம் முறைகேடு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பல மாணவர்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

     பலிபீடம்

    பலிபீடம்

    பல மாணவர்களை நீட் தேர்வு காவு வாங்கியிருப்பதாக கூறிய முதல்வர் மு.க ஸ்டாலின், பல மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைக்கும் அனுப்பியுள்ள நீட் தேர்வு தேவையாக என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதன் காரணமாக நீட் தேர்வை எதிர்ப்பதாகவும் முதல்வர் கூறினார். நீட் தேர்வு மோசமானது சமூக நீதிக்கு எதிரானது. இதை புரிந்து கொள்ள பலரும் மறுக்கின்றனர். நீட் தேர்வில் வெற்றி பெறும் வரை போராடுவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+