"நோ டேட்டா.." நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்கள் விவரம் இல்லை.. கை விரித்த தேசிய தேர்வு முகமை
சென்னை: ‛‛நீட் தேர்வு தொடர்பாக கிராமப்புற மாணவர்கள் பற்றிய விபரங்கள் எங்களிடம் இல்லை'' என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய தேர்வு முகமை பதிலளித்துள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேசிய அளவில் பொது மருத்துவம், பல்மருத்துவம் பயில நீட் (NEET) தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதலில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. தற்போது தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது.
இந்த தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டுகள் உள்ளன.

7.5 சதவீத உள்ஒதுக்கீடு
இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதையடுத்து அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என திமுக அரசு வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் தீர்மானம்
இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர் திருப்பி அனுப்பினார். இது பெரும் விவாத பொருளானதோடு, தமிழக அரசும், கவர்னருக்கும் இடையே கருத்து மோதல் உருவாகும் நிலைய ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் நீட் விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது கிடப்பில் உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினும், கவர்னர் ரவியை சந்தித்து பேசி இருக்கிறார்.

ஆர்டிஐயில் கேள்வி
இந்நிலையில் தான் தேசிய தேர்வு முகமையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, நீட் தேர்வு அறிமுகம் ஆனதில் இருந்து சில மாநிலங்கள் குறிப்பாக தமிழகம் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைப்பது இல்லை என குற்றம்சாட்டப்பட்டு கூறப்படுகிறது. இதனால் நீட் தேர்வு தொடர்பாக மாநிலம் வாரியாக கிராமப்புற மாணவர்களின் விபரம் உள்ளதா?. இருந்தால் அதுதொடர்பான தகவல்களை தாருங்கள்'' என தேசிய தேர்வு முகமையிடம் கேட்கப்பட்டது.

விபரங்கள் இல்லை
இதற்கு தேசிய தேர்வு முகமை பதிலளித்துள்ளது. அதில், ‛‛நீங்கள் கேட்கும் விபரங்கள் எங்களிடம் இல்லை. இதனால் முழுவிபரங்களை அளிக்க முடியவில்லை'' என கூறப்பட்டுள்ளது. இந்த பதிலால் நீட் நுழைவுத்தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் விபரங்கள் இல்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேசிய தேர்வு முகமையிடம் இதுபோன்ற விபரங்கள் இல்லாமல் இருக்க வாய்ப்பு கிடையாது. நீட் நுழைவுதேர்வில் கிராமப்புற மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற தகவல்களை வெளியிட்டால் அது கூடுதல் பிரச்சனையை ஏற்படுத்தலாம் எனவும், இதனால் தங்களிடம் விபரங்கள் இல்லை என தேசிய தேர்வு முகமை கூறியுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இன்னொரு கேள்வி
மேலும், இன்னொரு கேள்வியும் தேசிய தேர்வு முகமையிடம் கேட்கப்பட்டு உள்ளது. அதில் ‛இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரேமாதிரியான பாடத்திட்டங்கள் இல்லை. மாணவர்கள் வெவ்வேறு பாடத்திட்டங்களை படித்து வரும் சூழலில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது' என கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

13 மொழிகளில் கேள்வித்தாள்
இதற்கு தேசிய தேர்வு முகமை சார்பில், ‛‛நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் மத்திய, மாநில அரசுகளின் பாடத்திட்டங்களின் அடிப்படையில் தான் தயாரிக்கப்படுகிறது. மாநில பாடத்திட்டம் சார்ந்த உதவிகளுக்கு நிபுணர்கள் உள்ளனர். மேலும் மாநில அரசு பாடத்திட்டம், கிராமப்புற மாணவர்கள் எளிதில் கேள்விகளை புரிந்து கொள்ளும் வகையில் 13 மொழிகளில் கேள்வித்தாள் தயாரிக்கப்படுகிறது'' என கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications