நெல்லை கல்குவாரி விபத்து.. பின்னணியில் திமுகவின் "முக்கிய பிரமுகர்!" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு
சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் விபத்து நிகழ்ந்த கல்குவாரி காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமானது. இதற்கு சட்டசபையில் உன்னத பொறுப்பில் உள்ளவரின் ஆதரவு உள்ளது என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகாவில் அடைமிதிப்பான் குளம் உள்ளது. இங்குள்ள கல்குவாரியில் கடந்த 14ம் தேதி பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது.
இந்த இடிபாடுகளுக்குள் 6 பேர் சிக்கியுள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இடிபாடுகளுக்குள் சிக்கிய 6 பேர்
அதாவது பொக்லைன் மற்றும் லாரி டிரைவர்களான நாங்குநேரி அருகே உள்ள காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), தச்சநல்லூர் ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் (35), இளையநயினார் குளத்தைச் சேர்ந்த செல்வம் (27), விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளம் பகுதியை சேர்ந்த விஜய் (27), பொக்லைன் கிளீனர் ஆயன்குளத்தைச் சேர்ந்த மற்றொரு முருகன் (23) ஆகிய 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

மீட்பு பணி
இதில் முருகன், விஜய், செல்வம், மற்றொரு முருகன் ஆகிய 4 பேரை மீட்புக்குழுவினர் மீட்டனர். செல்வம், ஆயன்குளம் முருகன் ஆகிய 2 பேர் இறந்து விட்டனர். மேலும் கல்குவாரியில் சிக்கியுள்ள இருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பாறை சரிவு, மழை பொழிவு ஆகியவற்றால் மீட்பு பணி பாதிக்கப்பட்டு வருகிறது.

பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டு
இந்நிலையில் தான் குவாரி பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் குவாரியை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவசரஅவசரமாக திறந்ததும், இதற்கு தமிழக சட்டசபையில் உயர்பொறுப்பில் உள்ள ஒருவர் ஆதரவு அளிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுபற்றி அண்ணாமலை கூறியதாவது:

உன்னத பொறுப்பில் உள்ளவரின் ஆதரவு
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அடைமிதிப்பான் குளத்தில் குவாரியில் இரவு 10.15 மணிக்கு சட்டவிரோதமாக 300 அடியில் துளையிட்டு வெடிவெடிக்க செய்யப்பட்டுள்ளது. இதில் 4 அப்பாவிகள் இறந்துள்ளனர். இதை கூர்ந்து கவனிக்கும்போது மாநில அரசு நடந்த விதம் கேள்விக்குள்ளாகி உள்ளது. மார்ச் 2021ல் சீல் ஆன கல்குவாரி திமுக ஆட்சியில் அவசரஅவசரமாக திறக்கப்பட்டது. எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இயங்க விடப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரின் குவாரியாகும். இதற்கு சட்டசபையில் உன்னத பொறுப்பில் உள்ளவரின் ஆதரவு உள்ளது. இதில் திமுக தெரிந்து தவறு செய்துள்ளது.

குற்றஉணர்ச்சியில் இழப்பீடு அதிகரிப்பு
கல்குவாரியை நடத்த கூறிவிட்டு அப்பாவிகள் 4 பேர் பலியானதால் குற்ற உணர்ச்சியில் ரூ.1 லட்சமாக அறிவிக்கப்பட்ட ரூ.1 லட்சத்தை ரூ.15 லட்சமாக முதல்வர் உயர்த்தி உள்ளார். இதன்மூலம் தவறு செய்ததை மறைத்து மக்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். இது முடியாது. பாஜக போராட்டத்துக்கு பிறகே கனிமவளத்துறையின் உதவி இயக்குனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஓய்வுபெற்ற நீதிபதியின் ஒருநபர் கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர், எஸ்பி முதல் அனைவரிடமும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எடுக்கும் நடவடிக்கை அனைத்து குவாரிகளுக்கும் பாடமாக இருக்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications