நீங்க நடிகர் மட்டும் இல்ல..கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கங்க சரத்குமார்..விளாசிய நெட்டிசன்ஸ்! என்னாச்சு?
சென்னை : பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவராக இருந்து கொண்டு பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கும் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்கலாமா என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இது, சாதாரண, நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி வங்கி அதிகாரிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், காவல் துறையில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்டவர்களும் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி
இதனால், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆன்லைன் ரம்மியை ஒழிக்க தமிழக அரசு சார்பில் குழு அமைப்பட்டு தற்போது அந்த குழுவும் தமிழக அரசிடம் அறிக்கை அளித்துள்ளது. அதே நேரத்தில் அதிமுக, பாஜக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒழிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

சமக சரத்குமார்
ஆனால் தற்போது வரை ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை இல்லாத நிலையில் தொடர்ந்து தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கூட ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 15 லட்சம் பணத்தை இழந்ததற்காக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டும் என பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான் முதல் தமிழகத்தில் தமன்னா, மனோபாலா, சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் ஆன்லைனில் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.

சுப்ரீம் ஸ்டார்
நடிகர்களாக இருந்தாலும் சமூகத்துக்கு நன்மை பயக்கும் வகையில் நடிகர்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது. மற்றவர்கள் கூட வெறும் நடிகர்கள் என்றாலும் சுப்ரீம் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி எனும் கட்சியின் தலைவராக இருப்பதோடு சட்டமன்றத்திலும் உறுப்பினராக இருந்துள்ளார். பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருந்து கொண்டு நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஒரு விளம்பரத்திலேயே நடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோரிக்கை
எம்எல்ஏ மட்டுமல்லாது எம்பியாகவும் நாடாளுமன்றம் சென்ற நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக குரல் கொடுக்காமல் அதனை விளையாட வேண்டும் என தனது ரசிகர்களை ஊக்குவிப்பது போல இருப்பதாகவும், லாட்டரி சீட்டு கள்ளச்சாராயம் எப்படி மக்களின் உயிரை குடிக்கிறதோ அதேபோல்தான் ஆன்லைன் ரம்மி விளம்பரமும். எனவே ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிப்பதை சரத்குமார் நிறுத்துவதோடு ஏற்கனவே வெளியான விளம்பரங்களையும் வெளியிட வேண்டாம் என சமூக ஆர்வலர்களும் நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications