சட்டசபையில் வாய்திறந்த அதிமுக எம்எல்ஏ! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! இதுகூட தெரியாமலா இருக்கீங்க?
சென்னை : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை புதுப்பித்து தரவேண்டுமென நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தேன்மொழி சட்டசபையில் கேள்வி எழுப்பி நிலையில், அது கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது என்பதோடு, அதனை மீண்டும் கட்டித்தருவதாக அமைச்சரும் பதிலளித்தது சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக பகிரப்பட்டு வருகிறது
Recommended Video
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த தேன்மொழி சேகர்.
மூன்று முறை நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்தும் தொகுதிக்கு எதுவும் வெகுசிறப்பாக செய்யவில்லை என அப்பகுதி மக்கள் கூறினாலும், உள்ளூர் அரசியல் செல்வாக்கால் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருக்கிறார்.

தேன்மொழி எம்எல்ஏ
இந்நிலையில் பல மாதங்களாக சட்டசபையில் எதுவுமே பேசாத அவர்,தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் வாக்களித்த மக்களுக்கு ஏதாவது கேட்போம் என்று கேட்கப்போய் அது அவருக்கு வினையாக வந்துள்ளது. சட்டமன்ற கேள்வி நேரத்தில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான தென்மொழி, வத்தலகுண்டு பேரூராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் மிகவும் பழுதடைந்து உள்ளது அதை இடித்துவிட்டு புதிய அலுவலகம் கட்டித்தர வேண்டும் என மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் வேண்டுகோள் விடுப்பதாக பேசினார்.

சமூக வலைதளங்களில் கிண்டல்
அவர் பேசிய வீடியோவை அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் பெருமையாக வாட்ஸ்அப்பில் உலவ விட்டனர். ஆனால் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை டெண்டர் விடப்பட்டு வத்தலகுண்டு கிராம நிர்வாக அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட்டு தற்போது கட்டிடமே கட்டி முடிக்கப்பட்டு விட்டது வருவாய்த் துறையினரும் கட்டடத்தை திண்டுக்கல் இருந்த முதலமைச்சர் திறந்து வைத்து விட்டார்.

கலாய்க்கும் திமுக
உண்மை நிலைமை இப்படி இருக்க அதிமுக எம்எல்ஏ ஏற்கனவே இருக்கும் புதிய கட்டிடத்தை மீண்டும், கட்டித் தாருங்கள் எனக் கேட்டது தற்போது வலைதளங்களில் நகைச்சுவை பொருளாக ஆகி உள்ளது. தொகுதிக்குள் என்ன நடக்கிறது என்ன திட்டங்கள் நடக்கிறது என்று கூட தெரியாமலா ஒரு எம்எல்ஏ இருப்பார் என்று , திமுக ஐடி விங் நிர்வாகிகள் இதை பெரிய அளவுக்கு சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

அமைச்சருக்கு பதில்
தனது வீட்டிலிருந்து சட்டமன்றத்திற்கும் சட்டமன்றத்தில் இருந்து வீட்டுக்கு மட்டுமே எம்எல்ஏ சென்று வருவதாகவும், வத்தலக்குண்டு அதிமுகவில் எம்எல்ஏவுக்கு எடுத்துச் சொல்ல யாரும் இல்லை போல என திமுகவினர் வருத்து எடுக்கின்றனர். இருப்பினும் சட்டமன்றத்தில் எம்எல்ஏ கேட்ட கேள்விக்கு பதிலளித்த வருவாய்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தமிழகத்தில் பாழடைந்து கிடக்கும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் புதுப்பிக்கப்படும் என்று சொன்னாரே, தவிர வத்தலகுண்டில் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்ட விவரம் அவருக்கும் தெரியவில்லை என்பதுதான் ஹைலைட்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications