பாகிஸ்தானிலிருந்து போதை பொருள் கடத்தல்.. விடுதலை புலிகள் ஆதரவாளர் சென்னையில் கைது: என்.ஐ.ஏ நடவடிக்கை
சென்னை: விடுதலை புலிகள் இயக்க ஆதரவாளர் ஒருவர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாா்ச் மாதம் லட்சத்தீவின் மினிக்காய் கடற்கரையில் 5 ஏகே 47 துப்பாக்கிகள், 1,000 தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் ஆகியவற்றை கடலோரக் காவல் படை பறிமுதல் செய்தது.
இதுதொடா்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த மே மாதம் இலங்கையைச் சோ்ந்த 6 போ் மீது என்ஐஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

சற்குணம்
அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கையைச் சோ்ந்த சற்குணம் (என்ற) சபேசன் (47) என்பவர் குறித்து தெரியவந்தது. இவா் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சோ்ந்தவா். பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களையும் போதைப் பொருள்களையும் கடத்தி, அதன்மூலம் கிடைத்த தொகையை விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிா்ப்பிக்கும் முயற்சிக்காக இவர் வழங்கியுள்ளாா் என்று என்.ஐ.ஏ கூறுகிறது. இந்த தொகையை இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் வீரா்களுக்கு அனுப்பி வைப்பதில் அவா் பங்காற்றினாராம். இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவு எண்ணம் கொண்டவா்களின் சந்திப்பு கூட்டங்களுக்கு அவா் ஏற்பாடு செய்துள்ளாா்.

வளசரவாக்கம்
சென்னை வளசரவாக்கத்தில் தங்கியிருந்தபடி இவ்வாறு அவர் செயல்பட்டார். அவரை கைது செய்துள்ளோம். இவ்வாறு என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

விசாரணையை ஏற்ற என்.ஐ.ஏ
கடலோர காவல்படையின் படகிலிருந்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) மூலம் இந்த வழக்கு விசாரணை துவங்கப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு என்சிபி படகில் இருந்து கைது செய்யப்பட்ட ஆறு சிங்களவர்களை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையை முடித்தபோது என்ஐஏ இந்த வழக்கை ஏற்றுக்கொண்டது.

வரிசையாக கைதுகள்
பின்னர், என்ஐஏ விசாரணையில், சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள குன்றத்தூரில் வசித்து வந்த கொழும்பைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார். படகில் இருந்த ஒரு செயற்கைக்கோள் தொலைபேசியை பரிசோதித்தது பார்த்தபோது கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இவரை கைது செய்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications