எனக்கு இன்னொரு பேர் இருக்கு! நித்யானந்தாவின் உண்மைப் பெயர் இதுதானா? இணையத்தில் வைரலாகும் பர்த் டே!
சென்னை : வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. ஆறு மாசத்துக்கு முன்னாடி எப்படி போனேனோ அப்படியே வந்துட்டேன்னு சொல்லு.. என மாஸாக கம்பேக் கொடுத்து தனது வழக்கமான உற்சாக சிரிப்புடன் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருக்கிறார் நித்தியானந்தா..
இதையடுத்து நித்தியானந்தா யார் அவரது உண்மையான பின்னணி என்ன என்பது குறித்து வலை வீசி தேடி வருகின்ற பிரிட்டிஷன்கள் அதில் கிடைத்த சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்..
பண மோசடி பாலியல் பலாத்காரம் மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி சாமியார் நித்தியானந்தா கடந்த சில வருடங்களாக தலைமறைவாகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு அருகில் ஒரு குட்டி தீவு விலைக்கு வாங்கி அதற்கு கைலாச என பெயரிட்டு அங்கே வசித்து வருவதாக கூறப்படுகிறது.

நித்யானந்தா
அதற்கு முன்னதாக திருவண்ணாமலை கர்நாடக மாநிலம் பிடரி உள்ளிட்ட பகுதிகளில் அவரது ஆசிரமம் செயல் பட்டு வந்தது. பல வருடங்களுக்கு முன்பு யார் என்றே தெரியாத நித்தியானந்தாவை ரஞ்சிதா உடனான வீடியோ உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அதன் பின்னர் இந்தியா முழுவதும் பிரபலமான அவரை நெட்டிசன்கள் கேலி கிண்டல் செய்து வந்தனர். அது ஒரு வகையில் அவருக்கு விளம்பரமாகவே அமைந்தது அந்த வகையில் தன்னை ரோல் செய்பவர்கள் தனக்கு விளம்பரம் தருவதாக நித்தியானந்தாவை கூறியிருக்கிறார். தொடர்ந்து அவர் மீது மிரட்டல் பாலியல் வன்கொடுமை ஆள் கடத்தல் உள்ளிட்ட புகார்கள் வந்த நிலையில் இந்தியாவிலிருந்து தலைமறைவானார்.

கைலாசா நாடு
அதன்பிறகு தான் தனக்கென ஒரு நாடு, தனக்கென ஒரு பாஸ்போர்ட், தனக்கென ஒரு கூட்டம் என கைலாசவை உருவாக்கி கெத்து காட்டினார். தொடர்ந்து பேஸ்புக் நேரலைகளை தோன்றி தனது பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார் நித்தியானந்தா அதன் பிறகு அவரது அடையாளம் மங்கி போனது. திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் நுரையீரல் தொற்று, கல்லீரல் அலற்சி உள்ளிட்ட காரணங்களால் கோமாநிலைக்கு சென்றதாக தகவல் வெளியானது. சிலர் அவர் இறந்துவிட்டதாக வருந்தி பரப்பினர். நிலையில் தான் தான் இன்னும் சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறேன் என தனது கைப்படை எழுதிய கடிதத்தோடு கம்பேக் கொடுத்தார்.

மீண்டும் வந்தார்
தொடர்ந்து தான் சமாதி நிலையில் இருப்பதாகவும் அடிக்கடி பரமசிவனை சந்தித்து வருவதாக கூறியிருந்தார் மேலும் குரு பூர்ணிமா நாளன்று தான் மீண்டும் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு ஆசி வழங்குவேன் என்றார். சொன்னது போலவே நான் வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு என வந்த அவர் தற்போது தான் அப்கிரேடட் வெர்ஷன் புதிய உடல் புதிய ஆத்மாவுடன் திரும்பி வந்திருக்கிறேன் எனக்கு கூறினார். இதற்கிடையே நித்தியானந்தா குறித்த ஒரு ஆவணப்படம் வெளியாகி கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது இதை எடுத்து நித்தியானந்தா குறித்த பின்னணியை அறிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கும் ஏற்பட்டது.

உண்மையான பெயர்
உண்மையில் நித்தியானந்தாவின் பெயர் நித்தியானந்தா கிடையாது அவரது இயற்பெயர் ராஜசேகரன் திருவண்ணாமலை மிக சாதாரணமாக வாழ்ந்து வந்த அவர் அங்கு தான் தனது ஆசிரமத்தை முதன் முதலாக ஆரம்பித்தார். 1978 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அதாவது புத்தாண்டு அன்று திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் லோகநாயகி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர்தான் நித்தியானந்தா. இளமைக்காலத்தை கோவில்களில் கழித்த அவர் ராமகிருஷ்ண பரஹாம்சர், ரமண மகரிஷி போன்றவர்களை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு 12 வயதில் குண்டலினி சக்தியை பெற்றார் என என்றும் அதன் பின்னர் அவரது புகழ் பரவி இமயமலை பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆன்மீக ஆராய்ச்சி செய்தார் எனவும் அதன் பிறகு இமயமலையில் தான் ஒரு சாமியார் ராஜசேகரனுக்கு பரமஹம்ச நித்தியானந்தா என்ற பெயர் சூட்டினார் என கூறுகின்றனர் அவரது சீடர்கள்.

சர்ச்சைகள்
தொடர்ந்து காவிரி நதிக்கரை அருகே பக்தர்களுக்கு ஆசி வழங்க துவங்கிய அவர் கர்நாடகாவில் பிடதியில் ஆசிரமத்தை துவங்கியிருக்கிறார். அதன் பிறகு இந்தியா மட்டுமல்ல உலகம் எங்கும் அவருக்கு பக்தர்கள் குவிந்தனர். தற்போதைய நிலவரப்படி நித்தியானந்தாவுக்கு சுமார் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகள் இயங்கி வருகிறது அதன் பின்னர்தான் நித்தியானந்தா ரஞ்சிதா சர்ச்சையில் சிக்கி உலகம் முழுவதும் பிரபலமானார்.












Click it and Unblock the Notifications