சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னை யாரும் தூக்க வேண்டாம்.. பல்லக்கை வீசிவிட்டு நடந்தே சென்ற போப் ஜான் பால்.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வது சர்ச்சையானதற்கு இடையில்தான், போப்பை பல்லக்கில் தூக்கி செல்வது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த வழக்கம் எப்படி தொடங்கியது? இப்போது வழக்கத்தில் இருக்கிறதா என்று பார்க்கலாம் வாருங்கள்..

தருமபுர ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் பதவி வகித்து வருகிறார். இவரை பல்லக்கில் தூக்கி சென்று பவனி வருவதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இவரை கோவில் வழிபாட்டிற்காக பல்லக்கில் தூக்கி செல்வது வழக்கம்.

இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விசிக, திக உள்ளிட்ட அமைப்புகள், கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்து உள்ளனர். இதை பட்டினப் பிரவேசம் என்று அழைப்பார்கள்.

தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீங்க! பல்லக்கு தடையை நீக்குங்க! பேரூர் ஆதீனம் வலியுறுத்தல் தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீங்க! பல்லக்கு தடையை நீக்குங்க! பேரூர் ஆதீனம் வலியுறுத்தல்

பாப் பல்லக்கு

பாப் பல்லக்கு

இந்த விவகாரம் பெரிதாகி உள்ள நிலையில்தான், பாஜகவை சேர்ந்த நாராயண் திரிப்பாதி, எச். ராஜா போன்றவர்கள் போப்கள் பல்லக்கில் செல்வதை அரசு எதிர்க்குமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அதாவது ஆதீனம் பல்லக்கில் செல்வதை எதிர்ப்பவர்கள் போப்பை எதிர்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. போப்பை பல்லக்கில் தூக்கி செல்லும் நிகழ்வை பிற்போக்கு தனமானது என்று விசிக, திமுக மூலம் சொல்ல முடியுமா? அவர்களுக்கு மைனாரிட்டி வாக்குகள் தேவை.. அதனால் அப்படி சொல்ல மாட்டார்கள். இந்துக்களின் நம்பிக்கை மீது மட்டும் தலையிடுவார்கள், என்று விமர்சனம் வைத்துள்ளனர்.

இருக்கிறதா?

இருக்கிறதா?

இதன் காரணமாக போப்பை பல்லக்கில் தூக்குவது சர்ச்சையாகி உள்ளது. இந்த வழக்கம் எப்படி தொடங்கியது? இப்போது வழக்கத்தில் இருக்கிறதா என்று பார்க்கலாம் வாருங்கள்.. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்தான் போப். இவரை பல்லக்கில் சுமந்து செல்லும் முறைக்கு பெயர் sedia gestatoria - செடியா கெஸ்டாட்டோரியா. இதன் அர்த்தம் தூக்கி செல்லும் நாற்காலி என்பது ஆகும். பல அலங்காரங்களுடன் இந்த சேர் வவடிமைக்கப்பட்டு இருக்கும்.

 பாப் பல்லக்கு

பாப் பல்லக்கு

இதன் மீது பட்டு துணியால் போர்த்தப்பட்டு இருக்கும். நான்கு பக்கமும் நீண்ட குச்சிகள் இருக்கும். இதைத்தான் கத்தோலிக்க திருச்சபை ஊழியர்கள் தூங்குவார்கள். இரண்டு பக்கமும் மேலும் இருவரும் நின்று சாமரம் வீசுவார்கள். இந்த சாமரம் ஆஸ்டிரிச் இறகுகள் மூலம் செய்யப்பட்டு இருக்கும். பல நூறு ஆண்டுகளாக இந்த முறை கத்தோலிக்க திருச்சபையில் வழக்கத்தில் இருந்தது. மொத்தம் 4 பேர் அல்ல 12 பேர் இந்த பல்லக்கை தூங்குவார்கள்.

அலங்காரம்

அலங்காரம்

அவர்களுக்கு சிவப்பு உடை கொடுக்கப்பட்டு இருக்கும். அதற்கு முந்தைய காலங்களில் நேரடியாகவே போப்பை கத்தோலிக்க ஊழியர்கள் சுமந்து சென்ற சம்பவங்களும் நடந்து உள்ளன. இதற்கு கத்தோலிக்க திருச்சபை ஊழியர்கள் சொல்லும் காரணம்தான் முக்கியமானது. அதாவது போப் நடந்து சென்றால் அவரை மக்கள் பார்க்கக் முடியாது. போப் பொதுவாக அதிகம் வெளியே வர மாட்டார். அப்படி வரும் போது அவரை சந்திக்க பல்லாயிரம் பேர் இருப்பார்கள்.

என்ன காரணம்

என்ன காரணம்

போப் நடந்து சென்றால் அவரின் முகத்தை தூரத்தில் இருக்கும் மக்கள் பார்க்க முடியாது. பல நாடுகளில் இருந்து மக்கள் போப்பை சந்திக்க வருவார்கள். ஆனால் இப்படி பார்க்க முடியாமல் போனால் அவர்கள் மனம் வருந்துவார்கள். இதனால் எல்லோரும் பார்க்கும் வகையில் பல்லக்கில் எடுத்து செல்லப்படுகிறார். இதை கருதிக்கொண்டு பல்லக்கின் உயரம் மிகப்பெரியதாக வைக்கப்பட்டு உள்ளது. பல்லக்கு உச்சத்தில் உயரத்தில் இருக்கை அமைக்கப்பட்டு உள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

நடைமுறை இல்லை

நடைமுறை இல்லை

சரி இந்த நடைமுறை இப்பவும் அமலில் இருக்கிறதா என்றால் இல்லை.. போப்பாக இருந்த ஜான் பால் 1 என்பவர் இந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். நான் பல்லக்கில் செல்வதை விரும்பவில்லை என்று கூறினார். ஆனால் திருச்சபை ஊழியர்கள் இவருக்கு அழுத்தம் கொடுத்தனர். உங்களை மக்கள் பார்க்க வேண்டும். பல்லக்கில் செல்லுங்கள் என்று கூறினர். இதனால் பல்லக்கில் தொடர்ந்து செல்ல ஜான் பால் 1 முடிவு செய்தார்.

 நீக்கம் ஏன்

நீக்கம் ஏன்

ஆனால் அவர் 33 நாட்கள் மட்டுமே இந்த பதவியில் இருந்தார். படுக்கையில் புத்தகம் படித்தபடியே.. விளக்கை கூட அணைக்காமல் இவர் பலியானார். இவரின் மரணத்திற்கு ஹார்ட் அட்டாக்காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதன் பின் வந்த ஜான் பால் II என்று போப் கிறிஸ்துவத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்தியவர் என்று கூறப்படுபவர். 1978ல் இருந்து 2005 வரை இவர் போப்பாக இருந்தார். இவர் போப் ஆன போது இவருக்கு 57 வயதுதான் ஆனது. வந்த முதல் நாளே மாற்றங்களை கொண்டு வந்தவர்..

Recommended Video

    Madurai Adheenam Speech | இந்து மதத்தை அழிக்க பார்க்கிறார்கள் | Pattina Pravesam Issue
    போப் ஜான் பால்

    போப் ஜான் பால்

    நான் நடந்தே செல்கிறேன்.. என்னை யாரும் தூக்க வேண்டாம்.. எனக்கு பல்லக்கு வேண்டாம் என்று கூறினார். இதையடுத்து அவர் பல்லக்கை துறந்தார். அதோடு அவர் ஜீப் ஒன்றையும் பயன்படுத்து புதுமையை புகுத்தினார். அதன்பின் வந்த இரண்டு போப்களும் பல்லக்கை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக தற்போது பேட்டரி கார்கள், உயர்த்த மேடை கொண்ட ஜீப் போன்ற கார்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த பல்லக்கு முறை 1978க்கு பின் ரோமன் கத்தோலிக்க சபையில் பின்பற்றப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    No for Pallaku: Why Pope John Paul abolished Sedia Gestatoria method? தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வது சர்ச்சையானதற்கு இடையில்தான், போப்பை பல்லக்கில் தூக்கி செல்வது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X