சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்!
சென்னை: சென்னையில் உள்ள விடுதிகளில் இனி டீ, காஃபி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தங்கும் விடுதி, உணவுடன் கூடிய தங்கும் விடுதிகளின் நலச்சங்கம், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பிஜி விடுதிகளில் தேநீர், காபி கிடையாது எனவும், சப்பாத்தி, தோசை வழங்கப்படாது.. சாம்பார் குருமாவுக்கு பதிலாக சட்னி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய மோதல் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்து இருப்பதால் சர்வதெச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு
கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் எல்பிஜி ஏற்றுமதி வாராந்திர அளவில் 30 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், நம் நாட்டிலும் பல்வேறு பகுதிகள் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழகம் மட்டுமின்றி பெங்களூர், மும்பை என நாடு முழுக்க உணவகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பெங்களூரில் ஹோட்டல்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில் சில உணவுகள் சமைக்கப்படாமல் இருந்தது. சில ஓட்டல்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டன.
வணிக கேஸ் சிலிண்டர்கள் ஏஜென்சியிலும் சிலிண்டர்கள் கையிருப்பு இல்லாததால் மூடப்பட்டுள்ளது. இதனால் தட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது. ஓட்டல்களில் கையிருப்பில் உள்ள சிலிண்டர்களை வைத்து தான் செயல்பட்டு வருவதாக கூறி வருகிறார்கள். தற்போது சென்னையில் 20 சதவீதம் ஓட்டல்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது எனவும் இன்னும் இரண்டு நாட்களுக்கு இதே நிலை நீடித்தால் 50 சதவீத ஓட்டல்கள் மூடப்படும் நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.
சப்பாத்தி, தோசைக்கு பதில் வெரைட்டி ரைஸ்
இந்த நிலையில் தான் தமிழ்நாடு தங்கும் விடுதி, உணவுடன் கூடிய தங்கும் விடுதிகளின் நலச்சங்கம், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பிஜி விடுதிகளில் தேநீர், காபி கிடையாது என அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஐடி விடுதிகள் மற்றும் பிஜி விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பிஜி விடுதிகளில் தேநீர், காபி கிடையாது. இதேபோன்று சப்பாத்தி, தோசை வழங்கப்படாது.. சாம்பார் குருமாவுக்கு பதிலாக சட்னி வழங்கப்படும். சைட் டிஷ்க்கு பதிலாக வாரத்தில் மூன்று நாட்களுக்கு முட்டை மற்றும் பப்ஸ் வழங்கப்படும். கலவை சாதங்கள் வழங்கப்படும். கூடுதலாக அப்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி
ஈரான் - அமெரிக்கா போரால் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் விடுதி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் சென்னையில் தங்கி வேலை பார்த்து வரும் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் பிஜிக்களில் வெளியூர்களில் இருந்து தங்கி வேலை செய்து வரும் இளைஞர்களே அதிகம் தங்கியுள்ளனர். ஐடி உள்பட பல்வெறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பிஜிக்களில் அதிக அளவில் தங்கியுள்ள நிலையில், பிஜிக்கள் எடுத்துள்ள இந்த முடிவு பேச்சுலர்களுக்கு அதிர்ச்சியை கொடுப்பதாக அமைந்துள்ளது.
-
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Gold Price: தங்கம் விலை இன்று சரிந்தது.. சவரனுக்கு ரூ.800 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் ரேட் என்ன? -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை












Click it and Unblock the Notifications