கலவரக் காடான கள்ளக்குறிச்சி! தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு!
சென்னை : கள்ளக்குறிச்சி பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து நாளை தமிழகத்தில் நாளை முதல் சில நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என, தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் சிபிஎஸ்சி நர்சரி பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி இருந்தபடியே 12ம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில் மாணவி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்று அவரது பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.

மர்ம மரணம்
மாணவியின் பெற்றோர்களும் உறவினர்களும் பதறித் துடித்தபடி பள்ளிக்கு விரைந்தனர். தகவல் அறிந்த போலீசார், பள்ளிக்குச் சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறும் நிலையில், போராட்டங்களும் வலுத்து வருகிறது.

பள்ளி வளாகத்தில் கலவரம்
இதனிடையே, கள்ளக்குறிச்சியில் இன்று சக்தி பள்ளி வளாகத்தில் குவிந்த போராட்டக்காரர்கள் மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு பேருந்துகளை கொளுத்தி கலவரத்தில் ஈடுபட்டனர். முன்னதாக நேற்று சமூக வலைதளங்களில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. கலவரம் முற்றிய நிலையில், போலீசாரின் மண்டை உடைக்கப்பட்டதோடு, பள்ளி வாகனங்களும் சேதமாக்கப்பட்டது. இதனையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

பள்ளிகள் இயங்காது
இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் சில நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சின்னசேலம் மாணவி மர்ம மரணம் தொடர்பான போராட்டத்தின் போது, கள்ளக்குறிச்சி பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து நாளை தமிழகத்தில் நாளை முதல் சில நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என, தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் சிபிஎஸ்சி நர்சரி பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.
Recommended Video

பள்ளிகள் மீது நடவடிக்கை
அதே நேரத்தில் விதிகளை மீறி விடுமுறை அளித்தால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில், விதிகளை மீறி விடுமுறை விட்டால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பள்ளிகள் வழக்கம்போல பள்ளிகள் செயல்பட வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர்கள் இயக்குனர் கருப்புசாமி அறிவுறுத்ததியுள்ளார். இதனால் நாளை பள்ளிகள் திறக்கப்படுமா என்ற குழப்பம் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications