Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஸ்டர் ஸ்ட்ரோக்.. எடப்பாடி திட்டத்தை நொறுக்க ஓபிஎஸ் போட்ட பிளான்.. வாயைப் பிளக்கும் சவுத்! காலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தன் பொறுப்பில் இருந்துவந்த அதிமுக தங்கக் கவசம் கையை விட்டுச் சென்றிருப்பதால், அதற்கு ஈடாக தன் குடும்பத்தின் சார்பில் வெள்ளிக் கவசம் செய்து தேவர் சிலைக்கு அணிவிக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் தென் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பரவி வருகிறது.

2014ஆம் ஆண்டு அதிமுக சார்பாக ஜெயலலிதா பதிமூன்றரை கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தை பசும்பொன் தேவர் சிலைக்கு வழங்கிய நிலையில், அதிமுக பொருளாளர் என்ற முறையில், குருபூஜையின்போது அதனை வங்கியில் இருந்து பெற்று பசும்பொன்னிற்கு எடுத்துச் சென்று வந்தார் ஓபிஎஸ்.

அரசியல் சூழல்களால் கடந்த 2017ஆம் ஆண்டிலும், இந்த ஆண்டும் ஓபிஎஸ் தேவர் தங்கக் கவசத்தைப் பெற முடியவில்லை. இது அவரது தரப்பினருக்கு கொஞ்சம் அதிருப்தியைக் கொடுத்துள்ளதாம்.

இதனால், தனது பெருமையை நிலைநிறுத்தும் வகையிலும், செல்வாக்கைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையிலும் அதே 13.5 கிலோ எடையில் ஒரு வெள்ளிக் கவசத்தை தேவர் சிலைக்கு அணிவிக்க ஓபிஎஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

பசும்பொன் - அதிமுக

பசும்பொன் - அதிமுக

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த 2014-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தேவரின் சிலைக்கு 4.5 கோடி மதிப்பிலான, 13.5 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்கக் கவசத்தை ஆண்டுதோறும் அதிமுக பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து பெற்று, பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு அணிவிக்க விழாக் கமிட்டியாரிடம் ஒப்படைப்பார்.

இருவருக்கும் இல்லை

இருவருக்கும் இல்லை

கடந்த ஆண்டு வரை ஓபிஎஸ் தான் தேவர் சிலைக்கு தங்க கவசத்தை அணிவித்து வந்தார். தற்போது அதிமுகவில் உட்பட்சி பூசல்கள் அதிகரித்ததால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இரு தரப்பினரும், தேவர் தங்க கவசத்தை பெற முயற்சி செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ராமநாதபுரம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் தங்கக் கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கூறியதோடு, தேவர் ஜெயந்தி முடிந்ததும் மாவட்ட வருவாய் அலுவலரே மீண்டும் பத்திரமாக வங்கியில் வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

ரெண்டு முறை தவறிய துண்டு

ரெண்டு முறை தவறிய துண்டு

இதனால், அதிமுக சார்பாக வழங்கப்பட்ட தங்கக் கவசம் தற்போது அரசின் பொறுப்பிற்குச் சென்றுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி பிறகு மீண்டும் எடப்பாடியுடன் இணைந்த பிறகு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். அதிமுக பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் தேவர் தங்க கவசத்திற்கு உரிமை கோரினார். ஆனால், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தினகரன் முறையிட்டு, தன்னிடமே கவசத்தை வழங்க வேண்டும் எனக் கேட்டதால் மதுரை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்கள் வசம் தங்கக் கவசம் ஒப்படைக்கப்பட்டது. இப்படியாக, இரு முறை ஓபிஎஸ்ஸால் தங்கக் கவசத்தைப் பெற முடியவில்லை.

ஓபிஎஸ் முடிவு

ஓபிஎஸ் முடிவு

தேவர் தங்க கவச உரிமை தொடர்பான சிக்கல் நிலவியபோதே ஓபிஎஸ் தனக்கு நெருக்கமானவர்களிடம் இதுகுறித்து ஆலோசித்துள்ளார். ஒருவேளை தங்கள் பக்கம் கவசம் கிடைக்காமல் எடப்பாடி தரப்புக்கு கிடைத்தால் என்ன செய்வது என்றும் ஆலோசித்துள்ளனர். அப்போதுதான் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளனர். அதிமுக சார்பாக வழங்கப்பட்டதைப் போலவே 13.5 கிலோ எடையில் ஒரு வெள்ளிக் கவசத்தை தங்கள் குடும்பம் சார்பாகவே பசும்பொன் தேவர் சிலைக்கு அணிவிக்கலாம் என ஓபிஎஸ் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

கௌரவம்

கௌரவம்

இத்தனை ஆண்டுகளாக தேவர் குருபூஜையின்போது அதிமுக சார்பாக தங்கக் கவசம் அணிவிக்கும் நிகழ்வு முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஜெயலலிதா இருந்தபோது நந்தனம் தேவர் சிலை அமைத்தது, பசும்பொன் தேவருக்கு தங்க கவசம் என முக்குலத்தோர் சமூக ஆதரவைப் பெற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அது தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பெரிய பலமாக இருந்தது. இப்போது தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் செல்வாக்குக்கு ஜெயலலிதா மேற்கொண்ட அந்த முயற்சிகளும் முக்கியமான காரணம். எனவே, செல்வாக்கைத் தக்கவைத்து முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவை நிலைநிறுத்த வெள்ளிக் கவசத்தை அளிக்கலாம் என முடிவு செய்தனராம்.

எப்போதுமே இருக்கும் வகையில்

எப்போதுமே இருக்கும் வகையில்

அதிமுக சார்பாக அளிக்கப்படும் தங்கக் கவசம் குருபூஜை நிகழ்வின்போது மட்டுமே அணிவிக்கப்படும். மற்ற நேரங்களில் வங்கியின் லாக்கரில் தான் இருக்கும். தாங்கள் அளிக்கும் வெள்ளிக் கவசத்தை எப்போதுமே தேவர் சிலையிலேயே பொருத்தும் வகையில் பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் கேட்டுக்கொள்ளவும் ஓபிஎஸ் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம், அதிமுக தங்கக் கவசத்தை அணிவிக்கும் உரிமையை தான் இழந்தாலும், தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை இழக்காமல் காப்பாற்றிக் கொள்ளலாம் என ஓபிஎஸ் யோசித்திருக்கிறாராம்.

எப்போது?

எப்போது?

தேவர் குருபூஜை நிகழ்வின்போது நாளை 500 கார்களில் தனது ஆதரவாளர்களுடன் சென்று மாஸ் காட்டத் திட்டமிட்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், வெள்ளிக் கவசத்தை நிரந்தரமாக அணிவிப்பது குறித்து தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் பேசுவார் என்றும், விரைவில் வெள்ளிக் கவசம் தயார் செய்யப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் சார்பில் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் என்றும் தேனி மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

தொண்டர்களை கவரலாம்

தொண்டர்களை கவரலாம்

ஜெயலலிதா, தேவர் சிலைக்கு தங்கக் கவசம் வழங்கி முக்குலத்தோர் சமூக மக்களின் மனங்களில் இடம்பிடித்ததைப் போல, இந்த வெள்ளிக் கவசமும் தென் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், குருபூஜை நாட்களில் ஜெயலலிதா அளித்த தங்கக் கவசம், மற்ற நாட்கள் முழுவதும் ஓபிஎஸ் அளிக்கும் வெள்ளிக் கவசம் தேவர் சிலைக்கு அழகூட்டும், என்ற வகையில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அபிமானம் பெற ஓபிஎஸ் தரப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறதாம். எடப்பாடி பழனிசாமி தரப்பு தென் மாவட்டங்களில் பலம் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கெல்லாம் இந்தக் கவசம் மூலம் பதிலடி கொடுக்கலாம் என ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+