வீடு திரும்பிய ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமாக அதே உற்சாகத்துடன்! வழியில் கிடைத்த ‘ஹாப்பி நியுஸ்’!
சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற ஓ.பன்னீர்செல்வம் தொற்றிலிருந்து குணமானதையடுத்து இன்று வீடு திரும்பியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.
கடந்த 15ஆம் தேதி மாலை வரை தங்கள் தரப்பு நிர்வாகிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர்களுடன் நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவது குறித்து தீவிர ஆலோசனை செய்து வந்தார்.

ஓ.பன்னீர்செல்வம்
அதே நேரத்தில் அவருக்கு சில நாட்களாக லேசான காய்ச்சல் மற்றும் உடல்நல தொந்தரவுகள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது உறவினர் ஒருவர் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இதையடுத்து 15ஆம் தேதி இரவு சுமார் 9 மணி அளவில் பன்னீர்செல்வம் அவரை சந்திப்பதற்காக எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா உறுதி
அதில் ஓபிஎஸ்க்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதிக பாதிப்புகள் இல்லை என்றாலும் லேசான அறிகுறிகள் மட்டுமே ஓபிஎஸ்க்கு இருக்கிறது இருந்தும் அவரது வயது மற்றும் உடலில் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் நான்காவது மாடியில் உள்ள தனி அறையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

டிஸ்சார்ஜ்
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு, மருத்துவ சிகிச்சையின் மூலம் அவரது உடல் நலம் நன்றாக தேறியது. அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ததில் 'நெகட்டிவ்' என முடிவு வந்தது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று வீடு திரும்பினார்.

மருத்துவர்கள் அறிவுறுத்தல்
இதனிடையே ஓபிஎஸ் வீடு திரும்பியுள்ள அவரை மருத்துவர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்குமாறு பரிந்துரைத்து உள்ளதாகவும், இதனால் ஓ.பி.எஸ். தரப்பில் இருந்து தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் வீட்டுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மருத்துவமனையில் இருந்து உட்கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதைப் போல, நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுன் அவர் ஆலோசனை மேற்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

திட்டம்
அதே நேரத்தில் ஓபிஎஸ் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து விட்டதாகவும் நாளை அல்லது நாளை மறுநாள் முதலே அவர் வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் எனவும் இருவேறு தகவல்கள் உலாவுகின்றன. தற்போது உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம் ரிசர்வ் வங்கி கடிதம் என அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வஸ்திரங்களை பிரயோகித்து வரும் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து நிர்வாகிகளை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார் அவர் சென்னையில் இருப்பாரா அல்லது தேனி செல்வாரா என்பது குறித்தும் உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
Recommended Video

உற்சாகம்
இதனிடைய மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வரும் வழியிலேயே எடப்பாடி பழனிச்சாமியை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் சந்திக்க மறுத்ததாகவும் இதனால் அவர் சென்னை திரும்புவதாக தகவல் ஓபிஎஸ் இடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான குட்கா வழக்கு குறித்த விசாரணையும் எடப்பாடி தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தகவல்களால் ஓபிஎஸ் வழக்கமான உற்சாகத்துடன் பேசி உள்ளார். மேலும் தனக்குத் தெரிந்த பாஜக தலைவர்கள் மூலம் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து பேச நேரம் கேட்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இனி வரும் வாரங்களில் அதிமுக விவகாரம் மேலும் சூடு பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications