சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வரிடம் இருந்து பறந்த உத்தரவு.. சென்னையில் ரவுடிகளை ஒழிக்க ஆபரேஷன் DARE ரெடி.. செம பிளான்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தான் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

Recommended Video

    ரவுடிகளை ஒழிக்க Operation Dare! MK Stalin உத்தரவு

    அந்த வகையில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்கப்பட கூடாது என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு மிகக் கடுமையாக உத்தரவிட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் வகையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

    வெறும் 3 மாதம்..! தலைநகர் சென்னையில் அப்படியே தலைகீழ் மாற்றம்.. சாதித்துக் காட்டிய ககன்தீப்சிங் பேடிவெறும் 3 மாதம்..! தலைநகர் சென்னையில் அப்படியே தலைகீழ் மாற்றம்.. சாதித்துக் காட்டிய ககன்தீப்சிங் பேடி

    இதேபோல் தமிழ்நாடு டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதி ஓய்வு பெறுவதற்கு முன்னரே அடுத்த டிஜிபி குறித்தும், மக்களின் இடையூறு ஏற்படுத்தும் ரவுடிகளை அழிக்கும் வகையில் ஒரு திறமையான அதிகாரி வேண்டும் என்று அவர் நினைத்துள்ளார்.

    முதல்வர் உத்தரவு

    முதல்வர் உத்தரவு

    இந்த பின்னணியில்தான் நேர்மைக்கும், தனது கடமை தவறாத பணிக்கும் பெயர்போன சைலேந்திரபாபுவை டி.ஜி.பி.யாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்லது ரவுடிகளுக்கும் தலைநகராக விளங்கும் சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு, சென்னை புதிய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோருக்கு முதல்வரிடம் இருந்து உத்தரவு பறந்துஇந்த பின்னணியில்தான் நேர்மைக்கும், தனது கடமை தவறாத பணிக்கும் பெயர்போன சைலேந்திரபாபுவை டி.ஜி.பி.யாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்லது ரவுடிகளுக்கும் தலைநகராக விளங்கும் சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு, சென்னை புதிய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோருக்கு முதல்வரிடம் இருந்து உத்தரவு பறந்துள்ளது. ள்ளது.

    ஆபரேஷன் DARE

    ஆபரேஷன் DARE

    சைலேந்திரபாபுவும் சரி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலும் சரி தாங்கள் பதவியேற்ற முதல் நாளிலேயே ரவுடிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தனர். சென்னையில் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்குவதற்காக புதிய ஆபரேஷன் திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளார் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால். இந்த ஆபரேஷனுக்கு DARE என்று பெயரிடப்பட்டுள்ளது.

    2 வகைகளாக பிரிப்பு

    2 வகைகளாக பிரிப்பு

    இந்த ஆபரேஷன்படி ரவுடிகள் இரு வகைகளாக பிரிக்கப்படுவார்கள். அதாவது கடந்த 10 ஆண்டுகளாக ரவுடிகள் செய்த குற்றத்தின் அடிப்படையில் அவர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்படுவார்கள். மன்னிப்பு கேட்டு திருந்தி வாழும் ரவுடிகள், பொதுமக்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாத குறைவான குற்றச்செயல் செய்யும் ரவுடிகள் பி என்று வகைப்படுத்தப்படுவார்கள். பொதுமக்களை நேரடியாக தாக்குவது, மாமூல் வசூலிப்பது போன்ற குற்றச்செயல்கள் செய்யும் ரவுடிகள் ஏ பிரிவில் சேர்க்கப்படுவார்கள்.

    முழுமையாக அழிப்பு

    முழுமையாக அழிப்பு

    பொதுமக்களை அதிமாக அச்சுறுத்தும் ஏ பிரிவுகளில் உள்ள ரவுடிகள் முதலாவதாக DARE ஆபரேஷன் திட்டத்தின் கீழ் களையெடுக்கப்படுவார்கள். அடுத்ததாக பி பிரிவில் உள்ள ரவுடிகள் மீது நடவடிக்கை தொடங்கும். நிபந்தனை ஜாமினில் வெளிவந்து தலைமறைவாக சுமார் 39 ரவுடிகள் உள்ளனர் என்றும் அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். DARE ஆபரேஷன் மூலம் சென்னையில் ரவுடிகள் முழுமையாக அழிக்கப்படுவார்கள் என்று சங்கர் ஜிவால் நம்பிக்கை அளித்துள்ளார்.

    English summary
    Operation DARE is being prepared to eradicate rowdies in Chennai. Police Commissioner Shankar Jival has assured that the rowdies in Chennai will be completely wiped out
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X