சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிரீன் சிக்னல்.. ஓபிஎஸ் முடிவால் மொத்தமாக மூடப்படும் கதவு.. சசிகலாவிற்கு செக்.. இபிஎஸ் கேம்ப் குஷி!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சி பூசல் ஓரளவிற்கு முடிந்துள்ள நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்ச்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இடையே கொஞ்சம் இணக்கம் ஏற்பட தொடங்கி உள்ளது. சசிகலா இனி கட்சி வரவே முடியாது என்ற சூழ்நிலை உருவாக தொடங்கி உள்ளது.

அதிமுக கட்சிக்குள் கடந்த 2-3 வாரங்களாக நிலவி வந்த உட்கட்சி மோதல் ஒருவழியாக முடிவிற்கு வந்து இருக்கிறது. கட்சியில் சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 15 நிர்வாகிகள் மொத்தமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

என்ன மனுஷன் சார் இவர்... உ.பியை வியக்க வைக்கும் ஐஏஎஸ் அதிகாரி.. யார் இந்த அஜய் சங்கர்? என்ன மனுஷன் சார் இவர்... உ.பியை வியக்க வைக்கும் ஐஏஎஸ் அதிகாரி.. யார் இந்த அஜய் சங்கர்?

கட்சியின் மூத்த நிர்வாகி புகேழ்ந்தியும் நீக்கப்பட்டுள்ளார். சட்டசபை எதிர்கட்சித் தலைவர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், கட்சிக்குள் நிலவி வந்த மோதல் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது.

ஓபிஎஸ் இபிஎஸ்

ஓபிஎஸ் இபிஎஸ்

முக்கியமாக இபிஎஸ், ஓபிஎஸ் இடையே கடந்த சில நாட்களாக நிலவி வந்த கசப்பும் முடிவிற்கு வந்துள்ளது. ஆனால் ஓபிஎஸ் முழுசாக மனம் மாறவில்லை, அவர் கண்டிப்பாக அமைதியாக ஏதாவது செய்வார், சசிகலாவை உள்ளே கொண்டு வரும் வகையில் அமைதியாக காய் நகர்த்துவார் என்றெல்லாம் வாதங்கள் வைக்கப்பட்டன. ஆனால் இந்த வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்ச்செல்வம் அதிமுக தொண்டர்களுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை போட்டுள்ளார்.

உத்தரவு என்ன

உத்தரவு என்ன

அதிமுக கூட்டங்களின் போது கோஷம் எழுப்பும் தொண்டர்கள், மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவர்கள் இரண்டு பேரின் பெயரை மட்டுமே பயன்படுத்தி கோஷங்களை எழுப்ப வேண்டும். வேறு தலைவர்களின் பெயர்களை சொல்லி புகழ கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

சசிகலா

சசிகலா

நேரடியாக பல்வேறு தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து ஓபிஎஸ் இதை குறிப்பிட்டுள்ளார். கடந்த மீட்டிங்கில் அதிமுக அலுவலகத்தில் வெளியே நின்ற தொண்டர்களிடமும் ஓபிஎஸ் இதே கோரிக்கைகயை வைத்து இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் எதிர்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அதிமுக தொண்டர்கள் சிலர் ஓபிஎஸ் வாழ்க, இபிஎஸ் வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள். அதிமுக தொண்டர்கள் இடையே ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவு என்ற பிளவை இது ஏற்படுத்தியது.

மெரினா

மெரினா

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் முன்பும் கூட இதேபோல் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவு என்று மாறி மாறி கோஷம் எழுப்பினார்கள். அதிமுகவின் மோதல் இந்த கோஷங்கள் காரணமாக மொத்தமாக வெளியே தெரிந்தது. இது கட்சிக்குள் தலைவர்களுக்கு இடையே பெரிய கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் இதேபோல் இனி மோதல் ஏற்பட கூடாது என்பதால் கோஷங்களில் கண்ணியம் காக்க வேண்டும் என்று ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

சசிகலா

சசிகலா

ஓபிஎஸ் - இபிஎஸ் இடையில் நெருக்கமான உறவு அல்லது இணக்கம் ஏற்பட்டுவிட்டதையே இது காட்டுகிறது. கட்சிக்குள் எந்த வகையிலும் பிளவு ஏற்படுத்த வேண்டாம், கோஷ்டி மோதல் வேண்டாம், ஒற்றுமையாக இருப்போம் என்று ஓபிஎஸ் நினைப்பதையே இந்த உத்தரவு காட்டுகிறது. இது இபிஎஸ்ஸுடன் இணக்கமாக போகும் கிரீன் சிக்னலாக பார்க்கப்படுகிறது.அதிமுகவில் நிலவும் இந்த திடீர் ஒற்றுமை, ஒரு வகையில் சசிகலாவிற்கு வைக்கப்பட்ட செக்காக பார்க்கப்படுகிறது.

ஒற்றுமை

ஒற்றுமை

ஓபிஎஸ் நம்ம பக்கம் வருவார், கட்சிக்குள் செல்லலாம் என்று சசிகலா போட்டு வைத்திருந்த திட்டம் காலியாகி உள்ளது. ஓபிஎஸ் மேலும் விட்டுக்கொடுத்து போக தொடங்கி உள்ளார். கோஷத்தில் கூட ஒற்றுமை நிலவ வேண்டும் என்று ஓபிஎஸ் இணைகிறார். இதனால் கண்டிப்பாக இனி ஓபிஎஸ் இபிஎஸ் இடையே மோதல் வருவதற்கு வாய்ப்பு குறைவு. இதனால் கட்சிக்குள் இருக்கும் பிளவை பயன்படுத்தி உள்ளே வர நினைத்த சசிகலாவின் திட்டத்தில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

English summary
OPS and EPS are getting more closer: Sasikala plan to return may not happen anytime soon in AIADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X