#Exclusive ஓபிஎஸ்ஸின் இன்னொரு முகம்.. எடப்பாடியே மிரண்டு போய்ட்டாரு! “வெறும் 2 சீட்”.. அப்படியா கதை?
சென்னை : "ஓ.பன்னீர்செல்வம் இன்னொரு முகத்தைக் காட்டி இருக்கிறார். அதைப் பார்த்ததுமே எடப்பாடி பழனிசாமிக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் தலைமை கழகத்தில் இருந்து, அதிமுக கொடி, கட்சிப் பெயரை பயன்படுத்தக்கூடாது என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்." என ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓபிஎஸ், கட்சி பெயர் கொடி ஆகியவற்றைப் பயன்படுத்துவதை எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் கட்சி பெயரை பயன்படுத்த முடியாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நிகழ்வுகள் பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஒன் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார்.

என் மாவட்டத்தில் மட்டுமே
ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களான சில நூறு பேரை வைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருக்கிறார், அது எப்படி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆகும் என ஈபிஎஸ் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, "நான் மாவட்ட செயலாளராக இருக்கும் வட சென்னை வடக்கு மாவட்டத்தில் 33 வட்ட செயலாளர்கள் இருக்கின்றனர். 33 வட்டங்களிலும் ஒவ்வொரு வட்டத்திலும் 8 பொறுப்பாளர்கள் இருக்கின்றனர். பகுதி கழகம் என்று பார்த்தால், 18 + 18 என 36 பகுதி கழக செயலாளர்கள் இருக்கின்றனர். இதன்படி என் மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியில் பொறுப்பாளர்கள் மட்டுமே கிட்டத்தட்ட 800 பேர் இருக்கின்றனர். பகுதி செயலாளர், வட்டச் செயலாளர்கள், பிற அணிகளின் செயலாளர்கள், மகளிர் அணி செயலாளர்கள் என கட்சியின் நிர்வாகிகள் மட்டம் இருக்கிறது.

800 88 பொறுப்பாளர்கள்
என் மாவட்டத்தில் மட்டுமே 800 பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள் என்றால், 88 மாவட்ட செயலாளர்களுக்கும் கீழ் எத்தனை பொறுப்பாளர்கள் இருப்பார்கள், தொண்டர்கள் இருப்பார்கள் என்று கணக்குப் போட்டு பாருங்கள்" ஏற்கனவே பதவி சுகத்தை அனுபவித்த எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள். எம்.பிக்கள் தான் எடப்பாடி அணியில் இருக்கின்றனர். பதவிகளை அனுபவித்தவர்களை வைத்துத்தான் ஆதரவை சொல்ல முடியும் என்பது தவறானது. இந்தக் கட்சியே தொண்டர்களால் உருவானது தான். ஓபிஎஸ்ஸின் பலமே தொண்டர்கள் தான். எடப்பாடி பழனிசாமியால் ஆதாயமடைந்த நிர்வாகிகளை வைத்துக்கொண்டு, அவர்கள் தான் பலமானவர்கள் என ஜெயக்குமார் சொல்வது முட்டாள்தனமானது." எனத் தெரிவித்தார்.

ஓபிஎஸ் இன்னொரு முகம்
மேலும் பேசிய அவர், "ஓபிஎஸ் தலைமையை ஏற்று வருபவர்கள் யாராக இருந்தாலும் சேர்த்துக் கொள்வோம். ஓபிஎஸ் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியதை உலகமே உற்றுப் பார்த்திருக்கிறது. ஓபிஎஸ் இதுவரை இப்படிப் பேசியதில்லை. அவர் சாஃப்ட்டாக பேசித்தான் எல்லோரும் பார்த்திருப்பார்கள். ஓபிஎஸ் இன்னொரு முகத்தைக் காட்டி இருக்கிறார். அதைப் பார்த்ததுமே எடப்பாடி பழனிசாமிக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் தலைமை கழகத்தில் இருந்து, அதிமுக கொடி, பெயர், சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என ஒரு வக்கீல் நோட்டீஸை அனுப்பியுள்ளனர்.

இரட்டை இலை யாருக்கு
உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான தீர்ப்பு வரும். இரட்டை இலை ஓபிஎஸ்ஸுக்கு என உறுதியாகும். அதன்பிறகு, ஈபிஎஸ் அணியில் இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் வருவார்கள். சின்னம் இல்லாத எடப்பாடி பழனிசாமி பக்கம் யாரும் நிற்கமாட்டார்கள். கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் தான் விட்டுக்கொடுத்து, நான்கரை ஆண்டு காலமாக அதிமுக ஆட்சியைக் காப்பாற்றினார் ஓபிஎஸ். விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போக மாட்டார்கள். இனி ரெண்டில் ஒண்ணு பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு ஓபிஎஸ் வந்துவிட்டார். இரட்டை இலை 200% ஓபிஎஸ் கையில் தான் வரும்.

மாற்ற முடியாது
ஜெயலலிதாவே அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர், அதை மாற்ற முடியாது என்று தீர்மானம் கொண்டு வந்ததை எப்படி நீக்க முடியும்? எடப்பாடி பழனிசாமி அணியில் இன்று இருப்பவர்கள் வகிக்கும் பதவிகள் எல்லாம் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ்ஸும் இணைந்து நியமித்தவர்கள் தான். ஒருங்கிணைப்பாளரை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரமே கிடையாது. ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் எல்லா தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டனர். ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு வழக்கு நடப்பதால், அதில் எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது.

2 சீட் கூட
ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தான் வகித்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தேர்தல் ஆணையத்தில் கடிதம் அளித்துவிட்டார். ஓபிஎஸ் பயத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள், பதற்றம் எல்லாம் எடப்பாடி பழனிசாமி அணிக்குத்தான். எம்.பி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியால் 2 சீட் கூட ஜெயிக்க முடியாது. திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் ஒரு மாநாட்டை நடத்த இருக்கிறார். அதில் கூடும் தொண்டர்களைப் பார்த்துவிட்டு பேசுங்கள்." எனத் தெரிவித்துள்ளார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.
-
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே?












Click it and Unblock the Notifications