• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

‘டிக்கெட் கன்ஃபார்ம்’ கண் டெல்லியில்.. ‘கை’ எங்கேனு பாருங்க? எடப்பாடிக்கு தூண்டில் போட்ட வேந்தர்!

Google Oneindia Tamil News

சென்னை : 2024 லோக்சபா தேர்தலுக்காக இப்போதே தமிழக அரசியல் களத்தில் கூட்டணி, சீட் பேச்சுகள் தொடங்கியுள்ள நிலையில், சிறிய கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் ஒரே நேரத்தில் டெல்லியிலும், எடப்பாடியிடமும் தனது சீட்டை உறுதி செய்ய முயன்று வருகிறார்.

பாஜக கூட்டணியில் இடம்பெறுவதாகச் சொல்லப்படும் புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி போன்றவை தொகுதிகளைக் குறிவைத்து தேர்தல் வேலைகளைத் தொடங்கியுள்ளன.

தேர்தல் நெருங்குவதால், பாஜக தலைமை மற்றும் மக்களின் கவனத்தைப் பெறும் வகையில் புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தி வருகின்றன.

ஐஜேகே நிறுவனரும் பெரம்பலூர் எம்.பியுமான பாரிவேந்தர் 2024 தேர்தலில் கள்ளக்குறிச்சியை குறிவைத்து வேலையைத் தீவிரப்படுத்தி இருக்கிறார்.

2024 லோக்சபா தேர்தலில் தமிழக பாஜக யாருடன் கூட்டணி..அண்ணாமலை சொன்னது இதுதான்! 2024 லோக்சபா தேர்தலில் தமிழக பாஜக யாருடன் கூட்டணி..அண்ணாமலை சொன்னது இதுதான்!

பாஜக கூட்டணி

பாஜக கூட்டணி

பாஜக தலைமை, நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றுவதற்காக வலுவான கூட்டணியை அமைக்கவும் முயன்று வருகிறது. சமீபத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் எனப் பேசினார். அதனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் ஏற்றுக்கொண்டுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணியில் இணையவிருக்கும் கட்சிகளும் பாஜக, அதிமுக தலைமையிடம் தொடர்ந்து நல்லுறவைப் பேணி வருகின்றன.

வரிசை கட்டி

வரிசை கட்டி

கடந்த சில வாரங்களாக இந்த கூட்டணி பேச்சுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, அதிமுகவுக்கு கூட்டணி கட்சிகள் சப்போர்ட்டாக களமிறங்குவது, பாஜகவுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருவது என சீட்டை உறுதி செய்யும் படலத்தில் இறங்கியுள்ளனர். சமீபத்தில் ஈபிஎஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கூட கிருஷ்ணசாமி, ஜிகே வாசன், ஜான் பாண்டியன், நயினார் நாகேந்திரன் என கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வரிசையாக வந்தனர். தேர்தல் நெருங்க நெருங்க, கூட்டணி கட்சிகள் இன்னும் நெருங்கி வருகின்றன.

பாரிவேந்தர்

பாரிவேந்தர்

இதற்கிடையே ஐஜேகே நிறுவனரும் பெரம்பலூர் எம்.பியுமான பச்சமுத்து என்கிற பாரிவேந்தரும் கூட்டணி கணக்குகளில் ஈடுபட்டு வருகிறார். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பெரம்பலூர் தொகுதி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத் தேர்தலில் சீட் வழங்கப்படாத நிலையில், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து 2 இடங்களில் போட்டியிட்டது ஐஜேகே. திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பாரிவேந்தர் தொடர்ந்து திமுகவிற்கு எதிரான கருத்துகளை பேசி வருகிறார். அதேநேரம், பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொடர்ந்து பாராட்டியும் பேசி வருகிறார்.

போகாத இடத்துக்கு

போகாத இடத்துக்கு

மேலும், பாஜக கூட்டணியில் சேர முயற்சித்தோம், ஆனால், முடியவில்லை என்பதால் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். என்னை பொறுத்தவரை எம்.பி பதவி என்பது எனது அடையாளத்தின் சிறு துளி தான். இதற்காக நான் போகாத இடத்திற்கு போயிருக்க வேண்டாம், நான் தனித்து போட்டியிட்டிருந்தால் கூட 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். இதனை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன் எனப் பேசினார் பாரிவேந்தர். உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்று எம்.பி ஆன பாரிவேந்தர் திமுகவை சீண்டி வந்தாலும், ஸ்டாலின் இதனை பொருட்படுத்தவில்லை.

போகாத இடத்துக்கு

போகாத இடத்துக்கு

மேலும், பாஜக கூட்டணியில் சேர முயற்சித்தோம், ஆனால், முடியவில்லை என்பதால் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். என்னை பொறுத்தவரை எம்.பி பதவி என்பது எனது அடையாளத்தின் சிறு துளி தான். இதற்காக நான் போகாத இடத்திற்கு போயிருக்க வேண்டாம், நான் தனித்து போட்டியிட்டிருந்தால் கூட 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். இதனை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன் எனப் பேசினார் பாரிவேந்தர். உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்று எம்.பி ஆன பாரிவேந்தர் திமுகவை சீண்டி வந்தாலும், ஸ்டாலின் இதனை பொருட்படுத்தவில்லை.

பாஜக கூட்டணியில்

பாஜக கூட்டணியில்

இந்நிலையில், பாஜக கூட்டணியில் சீட் பெறுவதற்கான தொடர் முயற்சிகளில் பாரிவேந்தர் இறங்கியிருக்கிறார். பெரம்பலூர் தொகுதியை இப்போதே புக் செய்யும் வகையிலும் பாஜக தலைமைக்கு நெருக்கமானவர்களுடன் பேசி வருகிறாராம். தனக்குப் பதிலாக இந்த முறை தனது மகன் ரவி பச்சமுத்துவை களமிறக்கவும் பாரிவேந்தர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வயது முதிர்வின் காரணமாக தனது மகனை தேர்தலில் களமிறக்கி எம்.பியாக்கிவிட்டு தான் அரசியலில் இருந்து ஓய்வெடுக்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறாராம் பாரிவேந்தர். ரவி பச்சமுத்து தான் ஐஜேகே கட்சியின் தலைவராக இருக்கிறார்.

சைலண்ட் மூவ்

சைலண்ட் மூவ்

ஆனால், பாரிவேந்தரின் பெரம்பலூர் தொகுதியை பாஜக நிர்வாகி ஒருவர் ஏற்கனவே கேட்டு வருவதால் சைலண்டாக தனது குறியை கள்ளக்குறிச்சி பக்கம் திருப்பி இருக்கிறார் பாரிவேந்தர். போன தேர்தலிலேயே கள்ளக்குறிச்சியில் போட்டியிட விரும்பிய பாரிவேந்தர், பொன்முடியின் மகன் கௌதமசிகாமணி அங்கு போட்டியிடுவதால், பெரம்பலூரில் களமிறங்கும் சூழல் ஏற்பட்டது. பாரிவேந்தர் கள்ளக்குறிச்சியில் போட்டியிட விரும்பியதற்குக் காரணம் அங்கு இருக்கும், அவரது சாதி வாக்குளை குறிவைத்துத்தான் எனக் கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சிக்கு டைவ்

கள்ளக்குறிச்சிக்கு டைவ்

அந்த காரணத்தையும் வைத்து இந்த முறை, பெரம்பலூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு டைவ் அடிக்க பாரிவேந்தர் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள். அதற்கு சமீபத்திய சில நிகழ்வுகளையும் ஆதாரமாகச் சொல்கிறார்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் புள்ளிகள். சமீபத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுருவின் அழைப்பின் பேரில் உளுந்தூர்பேட்டை சென்றார் பாரிவேந்தர்.

அதிமுக மா.செவுடன் நெருக்கம்

அதிமுக மா.செவுடன் நெருக்கம்

அங்கு அதிமுக மா.செ குமரகுருவும், உதயசூரியன் சின்னத்தில் வென்ற எம்.பி பாரிவேந்தரும் அளவளாவிக் கொண்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி மிகவும் நெருக்கமானவர் குமரகுரு. கடந்த ஆட்சியில் திருப்பதி தேவஸ்தான போர்டு மெம்பராகவும் இருந்த குமரகுரு தற்போது உளுந்தூர்பேட்டை அருகே பிரமாண்டமான முறையில் திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள் கோயிலை கட்டி வருகிறார். இந்த கோவிலின் பூமி பூஜைக்கு எடப்பாடி பழனிசாமி சென்றதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லி + எடப்பாடி

டெல்லி + எடப்பாடி

ஒருபக்கம் பாஜக தலைமையிடம் கூட்டணியில் சீட் பெற முயற்சித்து வரும் அதேசமயம், அதிமுகவிலும் ஒப்புதலைப் பெறும் வகையிலேயே அதிமுக மாவட்ட செயலாளருடன் கூடுதல் நெருக்கம் காட்டி வருவதாகவும், அதன் மூலமே எடப்பாடி பழனிசாமியிடம் கள்ளக்குறிச்சி தொகுதியை தனக்கு ஒதுக்கச் செய்வது என்றும் பலமான திட்டத்தோடு ஒருக்கிறார் பாரிவேந்தர் என்கிறார்கள். கள்ளக்குறிச்சி தொகுதியில், தன் மகன் ரவி பச்சமுத்துவை எம்.பியாக்குவதில் உறுதியாக இருக்கிறாராம் பாரிவேந்தர்.

English summary
For the 2024 Lok Sabha elections, alliance and seat talks have already started in Tamil Nadu political arena. IJK founder Paarivendar is simultaneously trying to secure his ticket with BJP and Edappadi Palanisamy. For the 2024 Lok Sabha elections, alliance and seat talks have already started in Tamil Nadu political arena. IJK founder Paarivendar is simultaneously trying to secure his ticket with BJP and Edappadi Palanisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X