பட்டா மாறுதல் வரலாறு வருகிறது: சொத்து, நிலம் வாங்குபவருக்கு தமிழக அரசின் அட்டகாசமான வசதி.. இனி ஈஸி
சென்னை: தமிழகத்தில் நில ஆவணப் பராமரிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக, "பட்டா வரலாறு" என்ற புதிய சேவையை வருவாய்த்துறை அறிமுகப்படுத்த போகிறது.. நில உரிமையாளர்கள் மற்றும் நிலம் வாங்குபவர்கள் தங்களது சொத்தின் கடந்த கால விவரங்களை எளிதாக அறியும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலம் வாங்க ஆசைப்படுபவர்கள், இந்த பட்டா வரலாறு குறித்த விவரங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.. எனவே பட்டா வரலாறு குறித்து சுருக்கமாக இங்கே பார்ப்போம்!!
தமிழகத்தில் நிலம் வாங்குவது என்பது பலரின் வாழ்நாள் கனவு.. வீடு கட்ட வேண்டும், பிள்ளைகளுக்காக சேமிக்க வேண்டும், எதிர்கால பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் நிலம் வாங்குகிறார்கள்..

ஆனால் நிலம் தொடர்பான மோசடிகள், இரட்டை விற்பனை, போலி ஆவணங்கள் போன்றவை பலரின் கனவுகளை சிதைத்திருக்கிறது.. இதற்கெல்லாம் காரணம், நிலத்தின் கடந்த கால விவரங்களை முழுமையாக அறிய முடியாத நிலை தான்..
நிலம் வாங்குவோர் அறிய வேண்டியது
இதுவரை நிலம் வாங்கும் போது மக்கள் முக்கியமாக பார்த்தது வில்லங்கச் சான்றிதழ் மட்டுமே.. அதில் தற்போதைய உரிமையாளர் யார், முன்பு யார் யார் அந்த நிலத்தை வைத்திருந்தார்கள், வங்கிக் கடன் இருக்கிறதா என்பதைக் காண முடிந்தது.. ஆனால் பட்டாவில் அந்த நிலத்தின் வரலாறு இல்லை என்பது பெரிய குறையாக இருந்தது..
இந்த குறையை போக்கும் வகையில் வருவாய்த்துறை தற்போது 'பட்டா வரலாறு' என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.. இது நிலம் வாங்குபவர்களுக்கு மிக முக்கியமான ஒரு பாதுகாப்பு கவசமாக பார்க்கப்படுகிறது..
பட்டா பெயர்
இதன் மூலம் நிலத்தின் முந்தைய உரிமையாளர்கள் யார், எந்த ஆணையின் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது மற்றும் எந்தெந்தக் காலகட்டத்தில் யாரிடம் அந்த நிலம் இருந்தது போன்ற அனைத்துத் தகவல்களையும் பொதுமக்கள் துல்லியமாகப் பெற முடியும்.
இந்த சேவை முதற்கட்டமாக ஒரு தாலுகாவில் சோதனை அடிப்படையில் நடக்கிறது.. விரைவில் அனைத்து பகுதிகளிலும் செயல்பாட்டுக்கு வருகிறது.. கடந்த 2014ம் ஆண்டு முதல் உள்ள பட்டா விவரங்களை மட்டுமே இச்சேவையின் மூலம் பெற முடியும் என்றாலும், எதிர்காலத்தில் 2014-க்கு முந்தைய ஆவணங்களையும் இதில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பட்டா மாறுதல் - பிரிவுகள்
பட்டா மாறுதலில் உட்பிரிவில்லாத பட்டா, உட்பிரிவுடன் கூடிய பட்டா என இரண்டு வகைகள் உள்ளன.. முழு நிலம் ஒரே நபருக்கு விற்கப்படும் போது உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் செய்யப்படுகிறது.. நிலத்தை துண்டு துண்டாக பிரித்து விற்கும் போது உட்பிரிவுடன் கூடிய பட்டா நடைமுறைக்கு வருகிறது.. தற்போது உட்பிரிவில்லாத சொத்துகளுக்கு பதிவு முடிந்த உடனே ஆன்லைனில் பட்டா மாறுதல் செய்யும் வசதி ஏற்கனவே உள்ளது..
புதிய 'பட்டா வரலாறு' சேவை மூலம், பட்டாவும் ஒரு சாதாரண சான்றிதழ் அல்லாமல் ஒரு வரலாற்று ஆவணமாக மாறுகிறது.. இதனால் போலி பட்டா, மறைமுக பெயர் மாற்றம், பலமுறை விற்பனை செய்யப்பட்ட நிலங்கள் போன்ற மோசடிகள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது..
வெளிப்படைத்தன்மை
பொதுமக்கள் இதற்கான குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தித் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய வசதியால் நில மோசடிகள் பெருமளவு குறையும் என்றும், நிலம் தொடர்பான உரிமைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு விஷயம் மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.. பட்டா வரலாறு என்பது சட்ட உரிமை ஆவணம் அல்ல.. ஆனால் நிலத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் மிக முக்கிய ஆதாரம்.. வில்லங்கச் சான்றிதழுடன் சேர்த்து இதையும் பார்த்தால் தான் ஒரு நிலம் உண்மையில் பாதுகாப்பானதா என்பதை முடிவு செய்ய முடியும்..!!!
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications