சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுன் தளர்வு.. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. முதல்வர் பழனிசாமி கோரிக்கை..என்ன சொன்னார்?

இன்னும் சில நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லாக்டவுன் தளர்வுகள் காரணமாக மக்கள் கவனக்குறைவாக இருக்க கூடாது என்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: இன்னும் சில நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லாக்டவுன் தளர்வுகள் காரணமாக மக்கள் கவனக்குறைவாக இருக்க கூடாது என்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழக முதல்வர் பழனிசாமி இன்று மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. இ பாஸ் மாவட்டங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்வர் பழனிச்சாமி மருத்துவர் குழுவுடன் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மக்களுக்கு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார்.

அசராத எடப்பாடியார்.. 150 தொகுதிகளில் அதிமுக போட்டியிட முடிவு?.. அப்ப பாஜக கேட்ட 60 சீட்?அசராத எடப்பாடியார்.. 150 தொகுதிகளில் அதிமுக போட்டியிட முடிவு?.. அப்ப பாஜக கேட்ட 60 சீட்?

மக்கள் கட்டுப்பாடு

மக்கள் கட்டுப்பாடு

முதல்வர் தனது பேட்டியில், மக்கள் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் கொரோனா நோய் பரவலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.

காலி இடங்கள்

காலி இடங்கள்

தமிழகத்தில் மருத்துவ காலி பணியிடங்களை நிரப்ப ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் 2000 மினி -கிளினிக் அமைக்கப்படும். கிராம மக்கள் மருத்துவ வசதி பெறும் வகையில் மினி கிளினிக் அமைக்கப்படும். மக்களுக்கு எளிமையான முறையில் மருத்துவ வசதி சென்று சேர ஏற்பாடுகள் செய்யப்படும். எல்லோரும் மருத்துவ வசதியை அச்சமின்றி, தடங்கல் இன்றி பெறுவதே எங்கள் நோக்கம்.

எங்கள் நோக்கம்

எங்கள் நோக்கம்

தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதிகள் எப்போதும் போல இருக்கும்.கட்டுப்பாட்டு பகுதிகளை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் மக்கள் வெளியே செல்ல கூடாது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 85,000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகம்தான் கொரோனா சோதனையில் முதலிடத்தில் உள்ளது .

மக்கள் எச்சரிக்கை

மக்கள் எச்சரிக்கை

இன்னும் சில நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லாக்டவுன் தளர்வுகள் காரணமாக மக்கள் கவனமின்றி இருக்க கூடாது. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளி விடுவது அவசியம். எல்லோரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். தமிழகத்தில் ஒரு உயிர் பிரிய கூட அரசு அனுமதிக்காது.எல்லா உயிரும் அரசுக்கு முக்கியம்.

உயிர் முக்கியம்

உயிர் முக்கியம்

எங்களுக்கு பொருளாதாரம் முக்கியம் இல்லை. நிதி முக்கியம் இல்லை. உயிர்தான் முக்கியம். அதனால்தான் மருத்துவர் குழுவுடன் ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்கிறோம். தமிழகத்தில் குறைவான இறப்பு சதவிகிதம் உள்ளது. தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மக்களிடம் கேட்பது ஒன்றுதான், அரசு கேட்கும் அறிவுரையை கேளுங்கள், என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார் .

English summary
Amid lockdown ease down, People have to keep themself safe says CM Edappadi Palanisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X