சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திராவிடத்தின் கடைசி தூண்.. போராளி.. அன்பழகனுக்கு கட்சி பாகுபாடின்றி இரங்கல்.. பேராசிரியர் டிரெண்டிங்

திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் மறைவிற்கு வரிசையாக திமுகவினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் மறைவிற்கு வரிசையாக திமுகவினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதனால் தற்போது #பேராசிரியர் என்ற டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

    பேராசிரியர் க. அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்

    திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் அதிகாலையில் காலமானார். அதிகாலை 1 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    இந்த நிலையில் பேராசிரியர் அன்பழகனின் மறைவையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின், தான் எழுதிய உருக்கமான இரங்கல் கவிதையை இன்று வெளியிட்டார்.அன்பழகன் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இரங்கல் தெரிவித்தனர்

    இரங்கல் தெரிவித்தனர்

    இந்த நிலையில் அன்பழகனின் மறைவிற்கு வரிசையாக திமுகவினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும், கட்சி சார்பில்லாதவர்களும் வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். திமுக ஆட்சியின் மூலம் முதல் தலைமுறை பட்டதாரி ஆனவர்கள், மருத்துவம் பயின்றவர்கள் வரை தங்கள் இரங்கலை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

    டிரெண்ட் ஆகிறது

    டிரெண்ட் ஆகிறது

    இதனால் தற்போது #பேராசிரியர் என்ற டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இணையம் முழுக்க பலர் இந்த டேக்கில் போஸ்ட் செய்து இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தேசிய அளவில் இரண்டாம் இடத்தில் இந்த டேக் டிரெண்ட் ஆனது. தற்போது தேசிய அளவில் முதல் இடத்தில் டேக் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. வெளி மாநில மக்களும் கூட இதில் டிவிட் செய்து வருகிறார்கள்.

    நண்பர் காண வேண்டும்

    மண்ணுலகில் கோலோச்சியது போதுமென்றெண்ணி நண்பனை காண விண்ணுலகம் சென்றீர்களோ அய்யா? #இனமான_பேராசிரியர்க்கு ஆழ்ந்த இரங்கல்கள் சென்று வாருங்கள் #பேராசிரியர் பெருந்தகையே... என்று இவர் டிவிட் செய்துள்ளார். இதேபோல் பலர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் அன்பழகனுக்கும் இடையிலான நெருக்கமான நட்பு குறித்து டிவிட் செய்து வருகிறார்கள்.

    கடைசி தூண்

    1949ல் கொட்டும் மழையில் தமிழகத்தைத் கட்டி எழுப்பிய திராவிட தூண்களின் கடைசி தூண் சாய்ந்து விட்டது என்று இவர் குறிப்பிட்டுள்ளார். திமுகவை தொடங்கிய நபர்களில் முக்கியமான திகழ்ந்தவர்களில் அன்பழகனும் ஒருவர். இவர் தொடக்கத்தில் இருந்து தன்னுடைய இறுதி மூச்சு வரை திமுகவில் நிலையாக இருந்தார். திமுகவை கடைசி நொடி வரை கட்டிக் காத்த தலைவர்களில் இவர் முக்கியமானவர்.

    முதுகில் குத்தாதவர்

    அண்ணாவின் தம்பி, கருணாநிதியின் உற்ற தோழன்.திராவிடத்தின் முக்கிய தளபதி! கடினமான நேரங்களில் டெல்லிக்கு பயந்து சிலரைப் போல் முதுகில் குத்தாமல் கலைஞருக்கு தோள் கொடுத்து கட்சியை கட்டமைத்தவர் நட்பின் இலக்கணமே!, என்று இவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

    60 ஆண்டுகால ஆட்சி

    60ஆண்டு ஒரே கட்சி , 43ஆண்டு ஒரே பொது செயலாளர் எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாதவர், விசுவாசம், நட்புக்கு மிக சிறந்த உதாரணம் இவர் ஒருவரே. பழமை கொண்ட தமிழக அரசியலின் கடைசி போராளி. மிக சிறந்த மனிதர் , இவரின் மறைவு கட்சிக்கு அப்பாற்பட்டது, என்று இவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    English summary
    Perasiriyar is going trend on Twitter after K Anbazhagan Death in early morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X