முதன்முறை தமிழகத்தில் ரூ.100-ஐ கடந்தது டீசல் விலை.. பெட்ரோல் ரூ.102.10..அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்
பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்து கலங்கவைத்து வருகிறது
சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக டீசல் விலையும் 100 ரூபாயை கடந்துள்ளது... பெட்ரோல் விலை 102 ரூபாயை கடந்துள்ளது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் டீசல் விலை ரூ.100ஐ கடந்துள்ளதால் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன. இதனால், அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
கடந்த மாதம் 24-ந்தேதி முதல் டீசல் விலையும் மறுபடியும் அதிகமாக தொடங்கிவிட்டன. அப்போதிருந்து இப்போது வரை அந்த விலையும் குறையவே இல்லை..

இந்தியா
2வது அலை பரவல் இந்தியாவை உலுக்கி எடுத்துவிட்டது.. அதனால் வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை அவ்வப்போது, உயர்த்தி வருகின்றன. நடந்து முடிந்த தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

சென்னை
பெட்ரோல் டீசல் விலை கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் இருந்து குறையவே இல்லை. அந்த வகையில், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 79 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 59 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையின் இன்று பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் எகிறி மக்களை கலங்க வைத்துள்ளது.

உச்ச விலை
இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்து ரூபாய் 102.10 காசுகளாக உள்ளது. பெட்ரோல் விலை 102 ரூபாயை கடந்துள்ளது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. டீசல் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து ரூ.97.93 காசுகளாக உள்ளது.. இன்று புதிய விலைகள் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு கச்சா எண்ணெயின் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்யப்படாததும் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.
Recommended Video

சென்னை
தமிழகத்தில் முதன்முறையாக டீசல் விலையும் 100 ரூபாயை கடந்துள்ளது அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது... குறிப்பாக, கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100.29க்கு விற்பனை செய்யப்படுகிறது... காட்டுமன்னார் கோவில் பகுதியிலும் ஒரு லிட்டர் டீசலின் விலை 100 ரூபாயை கடந்தது... நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ 98.52க்கு விற்பனை செய்யப்படுகிறது... பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 105.87 ஆக உள்ளது..












Click it and Unblock the Notifications