சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 8,16,473 பேர் தேர்ச்சி - பள்ளிக்கு வராத 1656 மாணவர்கள் தேர்ச்சியில்லை

Google Oneindia Tamil News

சென்னை: பிளஸ் 2 மதிப்பெண்கள் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். இந்த ஆண்டு 8,16,473 பேர் +2 வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் 1656 பேர் பள்ளிக்கு வரவில்லை எந்த தேர்வும் எழுதவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    12th Result-ல் திருப்தி இல்லையா? | Anbil Mahesh Poyyamozhi Announcement | Oneindia Tamil

    கொரோனா பரவல் காரணமாக +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மதிப்பெண்கள் பட்டியலை அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

    செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பிளஸ் 2 மாணவர்கள் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
    பள்ளிக்கு வராத எந்த தேர்வுகளும் எழுதாத மாணவர்கள் 1656 பேர் தேர்ச்சி பெறவில்லை என்றார்.

    எவ்வளவு ஈஸி பாருங்க.. ஒரே எஸ்எம்எஸ்ஸில் நேரடியாக ரிசல்ட்.. மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் குட்நியூஸ்!எவ்வளவு ஈஸி பாருங்க.. ஒரே எஸ்எம்எஸ்ஸில் நேரடியாக ரிசல்ட்.. மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் குட்நியூஸ்!

    +2 மதிப்பெண் கணக்கீடு

    +2 மதிப்பெண் கணக்கீடு

    மாணவர்கள் தேர்வு எழுதாத காரணத்தால் எஸ்.எஸ்.எஸ்.சி. பொதுத் தேர்வில் இருந்து 50 சதவிகித மதிப்பெண்களும், +1 பொதுத் தேர்வில் இருந்து 20 சதவிகிதமும், +2 செய்முறை தேர்வில் 30 சதவிகிதம் என 100 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டுள்ளது.

    பிளஸ் 2 மதிப்பெண்கள்

    பிளஸ் 2 மதிப்பெண்கள்

    பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை 22ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு +2 பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்தவர்கள் யாரும் இல்லை. மதிப்பெண் பட்டியல் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மாணவ மாணவிகள்

    மாணவ மாணவிகள்

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 3,80,500 மாணவர்களும், 4,35,973 மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப்பாடப்பிரிவு 7,64,593 பேர் ,தொழிற்பாடப்பிரிவு 51,880 பேர் என 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    +2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஜூலை 22 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார்.

    தேர்வு எழுதலாம்

    தேர்வு எழுதலாம்

    தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வுகள் நடத்தப்படும். தனித்தேர்வர்களுக்கும் தேர்வு எழுத அனுமதிக்கப்படும். இந்த மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் வருகிற 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

    English summary
    School Education Minister Anbil Mahesh today released the list of Plus 2 marks. This year, 8,16,473 students have passed +2, 1656 have not attended school and have not written any exams, the minister said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X