சாதி என்பது கெட்ட வார்த்தையல்ல! பல பேர் அப்படித்தான் நினைக்குறாங்க.. அன்புமணி சொன்ன புது விளக்கம்.!
சென்னை : சாதியில் பல நல்ல விஷயங்களும் இருக்கின்றன எனவும், சாதி என்றால் கெட்ட வார்த்தை என்று பலபேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை திருவேற்காட்டில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பாமக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வரும் அன்புமணி பாமக 2.0, பாட்டாளி மாடல் ஆட்சி ஆகியவை குறித்து பேசி வருகிறார்.

அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில் சாதியில் பல நல்ல விஷயங்களும் இருக்கின்றன. சாதி என்றால் 'கெட்ட வார்த்தை' என்று பலபேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற அரசியல் பயிலரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதுதான் அன்புமணி ராமதாஸ் இதனை கூறியுள்ளார்.

சாதி பெயர்
பயிலரங்க நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி," சென்னை மாநகராட்சி தெருக்களில் சாதிப் பெயர்கள் நீக்கப்படுவதை இரண்டுவிதமாகப் பார்க்கலாம். சுதந்திரப் போராளிகளில் பலருக்கு, அவர்களுடைய சாதிப் பெயரை வைத்துத்தான் அவர்களின் அடையாளமே இருக்கிறது. அதை எந்த அடிப்படையில் பார்ப்பீர்கள், அனைத்துக்கும் ஒரே மாதிரி நடவடிக்கை எடுக்க முடியாது.

கெட்ட வார்த்தை இல்லை
சாதி என்பது இருக்கிறது, இனியும் இருக்கப்போகிறது. சாதியில் பல நல்ல விஷயங்களும் இருக்கின்றன. சாதி என்றால் கெட்ட வார்த்தை என்று பல பேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சாதியை வைத்து அடக்குமுறை செய்வது மட்டும்தான் தவறு. மற்றபடி சாதி அடிப்படையில் வழிபாடு, உடை, பழக்க வழக்கம், திருமண முறை, உணவு முறை போன்றவையெல்லாம் இருக்கின்றன.

அடிப்படையில் தவறு
மதம், மொழியின் அடிப்படையில் எவ்வளவோ அழகான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், சாதி என்றால் கெட்ட வார்த்தை என்று அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், அது தவறு" என்றார். இந்நிலையில் இன்று அமைச்சர் துரைமுருகனை சந்தித்து பேசிய அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்," பாமகவை சிறுமைப்படுத்துவதற்காக, திராவிட கட்சிகளின் யுக்தியால் சாதிக் கட்சி அடையாளம் எங்கள் மீது சுமத்தப்பட்டது" என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications