'இது திருவள்ளுவர் நாடு என்ற அறிவடையாளம் பெறவேண்டும்'.. கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!
சென்னை: நமது தாய்மொழியான தமிழின் அடையாளமே அய்யன் திருவள்ளூவர்தான். திருக்குறள் என்னும் அரிய பொக்கிஷம் மூலம் மனித வாழ்வு முழுவதும் இந்த காலத்துக்கு மட்டுமின்றி எக்காலத்துக்கும் உதவும் வகையில் எடுத்து கூறி இருப்பார் திருவள்ளூவர்.
இத்தகைய பெருமைமிக்க திருவள்ளூவரை போற்றும் வகையில் திருவள்ளூவர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் பல்வேறு அரசியல் தலைவர்களும் திருவள்ளூவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

தமிழின் பெருமையை எப்போதும் போற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளூவருக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர், '' திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
இதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளூவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து சென்னை பெசன்ட் நகரில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர் கூறி இருப்பதாவது:-
''திருவள்ளுவர்
திருநாளை முன்னிட்டு
வெற்றித்தமிழர் பேரவை சார்பில்
சென்னை பெசன்ட் நகர்
திருவள்ளுவர் சிலைக்கு
மாலைசூட்டி மகிழ்ந்தோம்
இது திருவள்ளுவர் நாடு என்ற
அறிவடையாளம் பெறவேண்டும்
என்ற கருத்தை
ஊடகத்தார்க்கு உரைத்தேன்''
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications