சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹிந்தி மாதிரி தமிழை நாடு பூராவும் படிக்க சொல்வீங்களா.. சென்னையில் முழங்கிய சீமான்.. பாய்ந்தது வழக்கு

சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: ''ஹிந்தி மாதிரி தமிழை நாடு பூரா படிக்கணும்னு சொல்வீங்களா? எங்கே சொல்லுங்களேன் பார்ப்போம்... இந்தி, இந்தியா இதை கட்டமைப்பது தான் இவங்க எண்ணம்.. அதுக்கேத்த மாதிரி ஒரு கல்வி கொள்கையை திணிக்க முயல்கிறார்கள்... பல மொழிகள் என்றால் ஒரு நாடாக இருக்கும்.. ஒரு மொழி என்றால் பல நாடு பிறக்கும்.. இதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சீமான் பேசியிருந்த நிலையில், தற்போது அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.

புதிய கல்வி கொள்கை விவகாரம் தற்போது விஸ்வரூபமெடுத்து வருகிறது.. பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.. அதனால் நேற்றைய தினம் தன்னுடைய வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தினார்.. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Corona D614G: மலேசியாவில் 10 மடங்கு வேகமாக பரவும் கொரோனா வைரஸின் புதிய திரிபு..பீதியில் மக்கள்Corona D614G: மலேசியாவில் 10 மடங்கு வேகமாக பரவும் கொரோனா வைரஸின் புதிய திரிபு..பீதியில் மக்கள்

படுவைரல்

படுவைரல்

இதன்பிறகு சீமான் செய்தியாளர்களிடம் பேசிய பேச்சு படு வைரலானது.. "இந்தி, இந்தியா இதை கட்டமைப்பது தான் இவங்க எண்ணம்.. அதுக்கேத்த மாதிரி ஒரு கல்வி கொள்கையை திணிக்க முயல்கிறார்கள்... 3வது மொழியாக இந்தி படிப்பது மூலமாக தேசிய ஒருமைப்பாடு உருவாகும்னு சொல்றாங்க... கவிஞர் கபிலன் எழுதியதுபோல, "அந்தி வந்தால் நிலவு வரும்... இந்தி வந்தால் பிளவு வரும்" இதை அவங்க புரிஞ்சிக்கணும்.

ஒரே மொழி

ஒரே மொழி

பல மொழிகள் என்றால் ஒரு நாடாக இருக்கும்.. ஒரு மொழி என்றால் பல நாடு பிறக்கும்.. இதையும் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்னை பெற்ற தாயை மதிக்காத உறவுகளிடம் எனக்கு பற்று வருமா... தாய்க்கும் மேலாக நேசிக்கின்ற எங்கள் தாய்மொழி மதிக்காத தேசத்தின் மீதுதான் பற்று வருமா.. எல்லா தேசிய மொழிகளையும் ஒழித்து கட்டிவிடு, ஒரே மொழியை நாடு ஏற்க வேண்டும் என்பதை நாம் கொஞ்சம் சிந்தித்து பார்க்கணும்.

பட்டேல்

பட்டேல்

இந்தியை நாடெங்கும் படிக்க வேண்டும், சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும் என்று சொல்றீங்களே.. தமிழை நாடெங்கும் படிக்க வேண்டும் என்று சொல்வீங்களா? சொல்லுங்களே பார்ப்போம்... மத்திய அரசிற்கு வரலாறு என்றாலே வட இந்தியர் வரலாறுதான்.வரலாறு என்றால் வல்லபாய் பட்டேல் தான் அவங்களுக்கு ஞாபகத்துக்கு வரும்.

வேலுநாச்சியார்

வேலுநாச்சியார்

நம்ம தாத்தா வஉ சிதம்பரனார் ஞாபகத்திற்கு வருவாரா? வீரப்பெண்மணி என்றால் ஜான்சி ராணியை சொல்லுவாங்க.. நம்ம பாட்டி வேலுநாச்சியாரை சொல்வாங்களா? இப்படி ஒரு இனத்தின் வரலாறு அழிக்கப்பட்டாலே அந்த இனம் அழிந்துவிடும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்" என்று கூறியிருந்தார். இந்தநிலையில், நேற்று முழு ஊரடங்கை மீறி ஆட்களை கூட்டி போராட்டம் நடத்தியதாக சீமான் உட்பட30 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

English summary
new education policy: case against seeman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X