நடிகர் சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. வசமாக சிக்கிய இளைஞர்.. திடீர் பரபரப்பு!
சென்னை: நடிகர் சரத்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் சென்னை கொட்டிவாக்கத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னை காவல் கட்டுப்பாடு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய ஒரு நபர் 'நடிகர் சரத்குமாரின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் வெடித்து விடும்'' என்று கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

வெடிகுண்டு மிரட்டல்
மர்ம நபர் கூறியதால் அதிர்ச்சி அடைந்த போலீசார், கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். மோப்ப நாய் உதவியுடன் வீடு முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர். வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதனால் இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதன்பின்னர் சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை போலீசார் ஆராய்ந்து பார்த்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்
விசாரணையில் அழைப்பு வந்த செல்போன் எண் விழுப்புரம் மாவட்டம், கூனிமேடு பகுதியை சேர்ந்த மணிபாலன் என்பவருடையது என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நீலாங்கரை உதவி ஆய்வாளர் பிரபு தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த புவனேஷ்(20) என்ற நபர்தான் செல்போனை எடுத்து மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. விசாரணையில் புவனேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

வாடிக்கையாக வைத்திருக்கிறார்
புவனேஷை கைது செய்த போலீசார், அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதால், ''இதுபோல் இனிமேல் செய்தால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறவினர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அவரை விடுவித்தனர். புவனேஷ் இதேபோல் முக்கிய பிரமுகர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

போலீசார் எச்சரிக்கை
தமிழக முன்னாள் முதல்வர்கள், தற்போதைய முதல்வர், நடிகர்கள் விஜய், அஜித் முக்கிய பிரபலங்களுக்கு மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிகிறது. முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications