"புத்திசாலி" பிடிஆர்.. டென்ஷனில் பாஜக.. காரணம் என்ன.. சீறிய வாதங்கள் + விவாதங்கள்.. பரபர "இலவசங்கள்"
பிடிஆருக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் வெடித்து கிளம்பி உள்ளன
சென்னை: நீதித்துறை இலவச திட்டங்களில் தலையிடுவதற்கு எதிராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்த நிலையில், திமுக மட்டும்தான் புத்திசாலித்தனமான கட்சி என்று கருத வேண்டாம் என்றும், நீங்கள் பேசுவது பற்றி நாங்கள் சொல்லாததால் எங்களுக்கு ஏதும் தெரியாது என்று நினைக்க வேண்டாம்" என்று சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி ரமணா நேற்றைய தினம் கூறியிருந்தார்.
இதையடுத்து, பிடிஆர் இலவசங்கள் குறித்து பேசியது தொடர்பான வாதங்களும், ஆரோக்கியமான விவாதங்களும் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, உபி சென்ற பிரதமர் மோடி, தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் ஆபத்தானது, அதனை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும்.. இந்த கலாச்சாரத்தை கடைபிடிப்பவர்கள், புதிய விரைவு சாலைகளை, புதிய விமான நிலையங்களை, பாதுகாப்பு பகுதிகளை கட்டமைக்க மாட்டார்கள் என்றார்..

ரமணா
இந்த வழக்கில் திமுகவும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் எம்பி வாதாடிக்கொண்டிருந்தபோது, குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரமணா, "நீங்கள் மட்டும்தான் அறிவார்ந்த கட்சி என்று நினைக்கவேண்டாம். நாங்கள் பேசாமல் இருப்பதால் நீங்கள் சொல்வதை எல்லாம் அறியாமல் இருக்கிறோம் என்று மட்டும் நினைக்காதீர்கள்." என்று காட்டமாக கருத்து தெரிவித்தார்.

பி.எச்.டி
கடந்த 4 நாட்களுக்கு முன்பு, இந்தியா டுடே நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் பிடிஆர் பேசும்போது, "இலவசங்களை தரக்கூடாது என்று சட்டத்தில் சொல்லவில்லையே.. அப்படி தரக்கூடாது என்று சொல்பவர்கள் துறை வல்லுனர்களாக இருக்க வேண்டும். அதாவது பொருளாதார நோபல், பிஎச்டி.. அல்லது இந்த துறைகளில் எங்களை விட சிறந்தவர் என்பதற்கான ஆதாரமாவது இருக்க வேண்டும். ஒருவேளை, எங்களை விட உங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் எங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லாம்.. எதுவுமே இல்லாதபோது உங்க பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?" என்று பிடிஆர் முன்வைத்திருந்தார்.

சவுத் ஃபர்ஸ்ட்
3 நாட்களுக்கு பிடிஆர் சவுத் ஃபர்ஸ்ட் என்ற ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் ஏன் தலையிட வேண்டும்? இலவச திட்டங்களுக்கு எதிரான விவாதம் என்பதே அர்த்தமற்ற ஒன்றுதான்.. மக்களின் பணத்துக்கு சுப்ரீம்கோர்ட்டை பாதுகாவலராக அரசியலமைப்பு சட்டம் சுட்டிக்காட்டவே இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் பணத்தை எப்படி செலவு செய்வது என்று சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் முடிவு செய்வார்கள்." என்று கூறியிருந்தார்.

காம்பேரிசன்
இவை அனைத்துமே தற்போது வாதமாக வெடித்துள்ளது.. இலவச திட்டங்கள் தேவையா? தேவையில்லையா? பிடிஆர் சொல்வது சரியா? தவறா? என்பது போன்ற விவாதங்கள் எழுந்துள்ளது.. அவைகளின் தொகுப்புதான் இவை: "மத்திய அரசின் பொருளாதாரத்தையும்,மாநில அரசின் பொருளாதாரத்தையும் ஒப்பீடு செய்வது வேடிக்கையாக உள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு இல்லையெனில் மாநில அரசினால் பொருளாதாரத்தில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காண முடியாது.. தமிழகம் உற்பத்தி மாநிலம் என்பதால், இங்கு வரி வருவாய் அதிகமுள்ளது...

NOBLE பரிசு
ஆனால், வரி வருவாய் அல்லாத விவசாயத்தையே பெரிதளவு சார்ந்துள்ள மாநிலங்கள் ஏழை மாநிலங்களாக உருவகப்படுத்தப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவாக உள்ள மாநிலங்கள் கூட உற்பத்தி மாநிலங்கள் போல கடும் உழைப்பை கொடுக்கின்றன.. பொருளாதாரத் துறையில் நோபல் பிஎச்.டி. அல்லது இந்த துறைகளில் நீங்கள் எங்களை விட சிறந்தவர் என்று சொல்வதற்கான ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும்.

பிடிஆர்
அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில், நீங்கள் எப்படி இதை செய்ய கூடாது என்று சொல்ல முடியும் என்று பிடிஆர் சொல்கிறாரே, அதை யாரை பார்த்து சொல்கிறார்? பிரதமரை பார்த்து கேட்கிறாரா? ஏன் இதையே, தமிழக முதல்வரை பார்த்து கேட்பாரா? தொழில்துறை நிதித் துறை நிகழ்ச்சிகளில் எல்லாம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறாரே உரையாற்றுகிறாரே, கருத்து சொல்கிறாரே... அவர் எப்போதாவது நோபல் பரிசு வாங்கியிருக்கிறாரா? அல்லது கருணாநிதி வாங்கியிருக்கிறாரா? தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அத்தனை கடனையும் நீங்கள் இப்போது அடைத்து விட்டீர்களா? பொருளாதாரத்தை நிமிர்த்தி விட்டீர்களா? தனிநபர் வருமானத்தை உயர்த்தி விட்டீர்களா?

புத்திசாலிகள்
தமிழக அரசுப் பணியாளர்களுக்கு மாத சம்பளம் கூட போட முடியாது என்ற நிலை இருக்கும்போது, மக்களின் அடிநாதத்தை உணர்ந்த பிரதமரின் பேச்சை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை.. இருப்பவர்களிடம் வசூலித்து இல்லாதவர்களையும் அரவணைத்து வாழச் செய்வது தான் ஒரு நாட்டின் இறையாண்மைப் பண்பு. தமிழகம் மட்டுமல்ல வளர்ந்த மாநிலங்கள் அனைத்துமே கூடுதல் நிதியை வசூலித்து வளரும் மாநிலங்களோடு பகிர்ந்து வருகின்றன.. இதுதான் கூட்டாட்சியின் மகிமை என்பதை பிடிஆர் போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும்" என்று எதிரான கருத்துக்கள் வலம் வருகின்றன.

1 - கருத்து
மற்றொருபக்கம், பிடிஆருக்கு ஆதரவுகள் குவிகின்றன.. "பிடிஆர் சொல்வதில் எவ்விதத் தவறும் இருப்பதாக தெரியவில்லை... நீதியரசர்கள் கட்சி சார்புடையோராக இருக்க முடியாது... மக்களின் வரிப்பணத்தில் இருந்து மக்களுக்கு தரப்படும் எதுவும் இலவசமாகாது... கட்டணமில்லாமல் மக்களுக்கு மின்சாரம் வழங்குவது என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கையாக மட்டுமே பார்க்க வேண்டும்.. பெரு முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் வரிப்பணத்தை தள்ளுபடி செய்வதை விட இது ஒன்றும் மோசம் கிடையாது.. நீங்கள் மட்டும்தான் புத்திசாலியா என்று நீதிமன்றம் கேட்கிறது..

2 - கருத்து
புத்திசாலிகள் என்று எங்குமே பிடிஆர் சொல்லவில்லை.. எங்களை விட திறமையாக செயல்பட்டிருந்தால் அந்த தரவுகளை தாருங்கள் என்றுதானே கேட்டார்.. எதையும் அறிவுக்கொண்டு பார்ப்பவர்கள், சட்டத்தின் மூலமே தீர்வு வேண்டுமென நினைப்பவர்கள், இந்திய தண்டனை சட்டத்தின்படி, அரசியல் சாசனம் என்ன சொல்லியிருக்கிறதோ, அதன் அடிப்படையில் தீர்ப்பு வேண்டுமே தவிர மனுநீதி அடிப்படையில் கிடையாது.. நாங்கள் புத்திசாலி இல்லைதான்.. ஏனென்றால், குஜராத்திற்கு ட்ரம்ப் வந்தபோது, துணியைகட்டி ஸ்கிரீன் போட்டு மறைக்கும் அளவுக்கு புத்திசாலித்தனங்கள் எங்களிடமில்லை..

3 - கருத்து
எதையும் வெளிப்படையாக செய்யும் நேர்மையும் துணிவு மட்டுமே இந்த மாநில ஆட்சியில் உண்டு.. பிடிஆர் சட்டம் பற்றி, அறிவுரை சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது.. ஆனால், பிடிஆருக்கு பொருளாதாரம் பற்றி நீங்கள் அறிவுரை சொன்னால் கோபம் வரவில்லையே ஏன்? தரவு தாருங்கள் என்று மென்மையாகத்தானே கேட்டார்.. மக்கள் பிரநிதித்துவ அவைகளில், அதிகாரபூர்வமாக இயற்றப்படும் சட்டங்களே எப்போதும் ஒரு நாட்டை நிர்மாணிக்கின்றன... வளர்ச்சியை தீர்மானிக்கின்றன.. அந்த வகையில் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் சட்டத்திற்குட்பட்டு கருத்துகூற முழு உரிமையையும் நாட்டின் அரசியல் சாசனம் வழங்கியிருக்கிறது...

4- கருத்து
தன் உரிமையை, தன் கருத்தை, மிக நேர்த்தியான முறையில் பேசியிருக்கும்போது, ஒருவர் இங்கு ஹைகோர்ட்டை, கெட்ட வார்த்தையில் திட்டியும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை.. 2022 க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னவானது? 2022 க்குள் அனைவருக்கும் சொந்த வீடு என்னவானது? டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 என்னவானது? இதெல்லாம் சொன்னது யார்? ஆக்சிஜன் சப்ளை சரியாக செய்யாமல், மக்களை குவியல் குவியலாக இறந்து, சுடுகாட்டில் "ஹவுஸ்புல்" போர்டு மாட்டியது யார்?" என்ற கேள்விகளுடன் ஆதரவு கருத்துக்கள் குவிகின்றன.. இப்படி கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியா பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications